பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்



புலவர்கள் போற்றும் புறநானூறு, கற்றவர்கள் போற்றும் கலித்தொகை, வையகம் போற்றும் வள்ளுவன் தந்த திருக்குறள் முதலியன இன்று தோன்றியனவா? நேற்று தோன்றியனவா? பல நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பழைமையான நூல்கள் அல்லவா? அந்த நூல்களை அறிஞர் அண்ணா பாராட்டவில்லையா? இந்த வகையில் தந்கைக்கும் தனயனுக்கும்கூடி முரண் பாடில்லையா?

தமிழினத்தை, தமிழ் சமுதாயத்தை வளர்த்து வாழ வைக்கும் எந்த ஒரு கருத்தையும் அது எப்பொழுது தோன்றியதாயினும், எங்கே பிறந்ததாயினும் எத ன் பெயரில் பிறந்ததாயினும் அறிஞர் அண்ணா தாராள மாக ஏற்றுக் கொள்கிறார்.

நம்முடைய சமுதாயத்துக்குத் துணை செய்யாததும், துணை செய்யாததோடு மட்டுமன்றி, ஊரும் கறையான் மரத்தை அரிப்பது போலவும், என்புருக்கி போலவும் நம்முடைய சமுதாய முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள எந்த ஒரு கருத்தையும் காலம், களம், இடம் பாராமல் உறுதியுடன் எதிர்க்கின்றார்,

சமூக அநீதிகளோடு அவர் சமரசம் செய்துகொள்ள விரும்பாதவர். ஆதலால் வாழ்க்கைக்கு உதவாத, பழமைக்கு, அவர் பகைவரேயாம். வாழ்க்கையை அறிவாலும் ஆர்வத்தாலும் திறனறிந்த உழைப்பாலும் தூண்டி வளர்க்கும் எந்த ஒரு கருத்துக்கும் அறிஞர் அண்ணா ஒரு கொழு கொம்பாவார்.

அறிஞர் அண்ணா ஒரு சிந்தனையாளர்; சொற்பொழிவாளர்; எழுத்தாளர்; செயல் தொண்டர் .