பக்கம்:சமுதாய வீதி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I () 3 சமுதாய வீதி

நியாய வாதிகளும்; நல்லவர்களும் முறைமாறிய சரிசம மற்ற பலத்தோடு நிரந்தரமாகப் போராடிக் கொண்டி ருக்கிறார்களென்றே தோன்றியது.

சிந்தாதிரிப்பேட்டை அங்கப்பனின் ஓவியக் கூடத் திற்கு எல்லோருமாகப் போய்ப் பார்த்து nன்கள் தேர்ந் தெடுத்து விட்டு வந்த தினத்திற்குப் பின் ஓர் இரண்டு. வாரங்கள் கோபாலோடு நெருக்கமாகவோ, அடிக்கடி சந்தித்துப் பழகவோ வாய்ப்பின்றிப் போகும்படி தானா கவே ஒரு வசதி நேர்ந்தது முத்துக்குமரனுக்கு.

அடுத்த நாளே, ஏதோ ஒரு படத்தின் வெளிப்புறக் காட்சிப் படப்பிடிப்பிற்காகக் கோபால் விமானம் மூலம் குழுவினருடன் காஷ்மீருக்குப் புறப்பட்டு விட்டான். தான் திரும்ப இரண்டு வாரமாகுமென்றும்-அதற்குள் நாட கத்தை எழுதி முடித்து ரிஹர்ஸ்லைத் தொடங்குவதற்கு ஏற்ற முறையில் வைத்திருக்க வேண்டுமென்றும் முத்துக் குமரனிடமும், மாதவியிடமும் கோபால் திரும்பத் திரும் பச் சொல்லிவிட்டுப் போயிருந்தான். அதனால் முத்துக் குமரன் கடற்கரைக்கோ, வேறு வெளியிடங்களுக்கோ செல்வதைக் குறைத்துக் கொண்டு நாடகத்தை தீவிரமாக எழுதி முடிப்பதில் ஈடுபட்டான். மாதவியும் அவன் எழு திய கையெழுத்துப் பிரதியை டைப் செய்வதில் தீவிரமா கக் கவனம் செலுத்தினாள். அந்த வேகமான நாட்களில் முத்துக்குமரன் இரவிலும் கண்விழித்து எழுதினான். இரவில் அவன் எழுதிக் குவித்தவற்றையும் சேர்த்துப் பகலில் பிரதி எடுக்க வேண்டிய கடுமையான வேலை மாதவியின் தலையில் சுமந்தது. இதனால் ஒரு பத்துப் பன்னிரண்டு நாட்கள் எப்படிக் கழிந்தனவென்றே தெரி யாமல் வேகத்தில் போய்விட்டது.

கோபால் வெளிப்புறக் காட்சிப் பட்ப்பிடிப்பிற்காகக் காஷ்மீர் புறப்பட்டுச் சென்ற பன்னிரண்டாவது நாள் அவனிடமிருந்து, 'நாடகம் எந்த நிலையில் இருக்கிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/104&oldid=560900" இலிருந்து மீள்விக்கப்பட்டது