பக்கம்:சமுதாய வீதி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 07

"எல்லாப் படத்திலேயும் ஏன் ஒருத்தரே பல துறை யிலும் திறமைசாவின்னு காமிக்க முயற்சி பண்ணி எல்லாத் துறையிலும் தான் அரைகுறைதான்னு நிரூபிக் கிறாங்க?"

தமிழ்ப்படத் தயாரிப்பிலே-யாராலேயும் போக்க முடியாத குறை அது! இங்கே டைரக்டரே திடீர்னு ஒரு படத்துக்கு கதை எழுதுவாரு. அவரு நோக்கம் தனக்குக் கதை எழுதவும் தெரியறதை நிரூபிக்கனும்கிறதுதான். புகழுறவங்களும் அதை உபசாரத்துக்குப் புகழுவாங்க. பார்க்கிறவங்களும் அதை உபசாரத்துக்குப் பார்ப்பாங்க். எழுதறவங்களும் அதை உபசாரத்துக்குப் புகழ்ந்து எழுது வாங்க.

"ஏன் நிறுத்திட்டே? மேலே சொல்லேன்! டைரக்டர் கதை எழுதறப்ப நாம் ஏன் எழுதக் கூடாதுன்னு நடிகருச் குத் தோணும். உடனே நடிகரும் ஒரு கதை எழுதுவாரு, அதை உபசாரத்துக்குப் புகழுவாங்க...'

"ஆமாம்! அப்புறம் திடீர்னு ஸ்டுடியோ லைட்பாய் ஒரு நாள் ஒரு லவ் ஸ்டோரி எழுதுவான். ஜனநாயகத் திலேதான் யாரும் எதையும் செய்யலாமே? அதுவும் படமாகும். ஒருவேளை அது டைரக்டர், நடிகரெல்லாம் எழுதினதைவிட ரியலாகவும் பிராக்டிகலாகவும் இருந் தாலும் இருக்கும்.'

பின் வீட்டில் இருந்த பரம ரசிகர் ஒருவர் படத்தில் கவனத்தைச் செலுத்தாமல் முத்துக்குமரனும் மாதவியும் பேசிக் கொள்வதைப் பற்றிச் சூள்கொட்டி முணு முணுக்கத் தொடங்கவே மாதவியும் முத்துக்குமரனும் பேசுவதை நிறுத்தினார்கள். படத்தில் கதாநாயகியின் கனவு nன் ஒடிக்கொண்டிருந்தது, ஜிகினா மரங்கள் ஒவ்வொன்றிலும் வெள்ளிக் கனிகள், கதாநாயகி ஒவ் வொரு மரத்திலும் ஏறி ஊஞ்சலாடியும்-ஒரு மரம்கூட முறியவில்லை. அவ்வளவு கனமான அவள், ஒரு பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/109&oldid=560905" இலிருந்து மீள்விக்கப்பட்டது