பக்கம்:சமுதாய வீதி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩葛召 சமுதாய வீதி

மாதவி தனக்குத் தெரிந்த அளவில் அவருடைய கேள் விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டு வந்தாள். முன்ளtட் டில் அவளருகே முத்துக்குமரன் அமர்ந்திருந்தான். அப் துல்லா பின் வீட்டில் தனியாக உட்கார்ந்திருந்தார்.

பங்களா வாசலில் போர்டிகோவிலேயே கோபால் அப்துல்லாவை எதிர்கொண்டு வரவேற்றான். வரவேற்கும் போதே தும்பிக்கை பருமனுக்கு ஒரு பெரிய ரோஜாப்பூ மாலையையும் அப்துல்லாவுக்குச் சூட்டினான். விருந்துக்கு வந்திருந்த மற்ற நடிகர் நடிகைகளையும், தயாரிப்பாளர் களையும், சினிமாத்துறை சம்பந்தப்பட்டவர்களையும் அப்துல்லாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் கோபால். விருந்துக்கு முன் எல்லோரும் உட்கார்ந்து கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

கோபாலுடைய விருந்து ஏற்பாட்டிலும், தடபுடல் களிலும் அப்துல்லா ஒரளவு நன்றாகவே மயங்கிப் போனார். என்ன காரணமோ தெரியவில்லை, முத்துக் குமரன், மாதவி இருவரிடமுமே அன்று கோபால் கடுகடுப் பாக இருந்ததுபோல் தெரிந்தது. விருந்தின்போது அப்துல்லா நடிகைகள், எக்ஸ்ட்ராக்கள் அடங்கிய கூட்டத் தினிடையே அமர்த்தப்பட்டார். ஒரு பணக்கார ஷேக் தன்னுடைய ஹோத்தில் அமர்ந்திருப்பதுபோல் அந்தச் சமயத்தில் அவர் காட்சியளித்தார். நடிகைகளின் இங்கித சிரிப்பொலிகளுக்கு நடுவே அப்துல்லாவின் வெடிச்சிரிப் பும் கலந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.

விருந்து முடிந்து திரும்பப்போகும்போது அப்துல் லாவை ய்ார் ஒஷியானிக்கில் கொண்டு போய்விடுவ தென்ற பிரச்னை எழுந்தது. தான் கொண்டு போய்விட வேண்டியிருக்குமோ என்ற தயக்கத்தோடு கோபாலுக்கு முன்னாலே போய் நின்றாள்.

'நீ வேண்டாம். நீ போய் உன் வேலையைப் பாரு. உனக்குக் குறிப்புத் தெரியாது. நீ ஊரை எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/160&oldid=560957" இலிருந்து மீள்விக்கப்பட்டது