பக்கம்:சமுதாய வீதி.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி . 罩7直

'உள்ளே வரலாமா?"

'சொல்லிட்டுப் போறவங்கதான் மறுபடி கேட்டுக் கிட்டு வரணும். சொல்லாமலே எங்கெங்கியோ எவனெவ. னோடவோ போறவங்க வர்றவங்களைப் பத்தி என்ன சொல்றதுக்கு இருக்கு?’’

'இன்னும் என்னை உள்ள வரச் சொல்லி நீங்க கூப் பிடலை...'

"அப்பிடிக் கூப்பிடணும்னு ஒண்ணும் கண்டிப்பு இல்லே."

"அப்படியானா நான் போயிட்டு வரேன்.'

'அதுக்கென்ன? இஸ்டம்போலச் செய்துக்கலாம்.'

ஒர் அசட்டுத் தைரியத்தில் போய்விட்டு வருவதாகச் சொல்லி விட்டாளே ஒழிய அவளால் அங்கிருந்து ஒர் அங்குலம் கூட வெளியே நகர முடியவில்லை. அவனுடைய அலட்சியமும் கோபமும் அவளை மேலும் மேலும் ஏங்கச் செய்தன. முகம் சிவந்து கண்களில் ஈரம் பளபளக்க நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள் அவள்.

அவன் குடிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்தான். அவன் முற்றிலும் எதிர்பாராத விதமாகத் திடீரென்று அவள் பாய்ந்து வந்து கீழே குனிந்து அவனுடைய பாதங் களைப் பற்றிக்கொண்டாள். அவளுடைய கண்களின் ஈரத்தை அவன் தன் பாதங்களில் உணர்ந்தான்.

"நான் அன்னைக்கி செஞ்சது தப்புதான்? பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சிடுங்க."

'என்னைக்கு செஞ்சது? எதுக்கு திடீர்னு இந்த நாடகம்?’’

"'உங்களைத் துணைக்கு வரச்சொல்லி கூப்பிட்டப் புறம்-நான் கோபால் சாரோட காரிலே வீட்டுக்குப் போயிருக்கப்படாது. திடீர்னு அவரைப்பகைச் சுக்கவோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/173&oldid=560970" இலிருந்து மீள்விக்கப்பட்டது