பக்கம்:சமுதாய வீதி.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 72 சமுதாய வீதி

முகத்தை முறிச்சுக்கவோ முடியாமப் போயிட்டது.'

'அதான் அன்னிக்கே சொன்னேனே யார் துணை பாக் கெடச்சாலும் உடனே கூடப் போறவங்க யாரோட போனாத்தான் என்ன?’’

"அப்பிடிச் சொல்லாதீங்க...நான் முன்னாடி அந்த மாதிரி இருந்திருக்கலாம். இப்ப அப்பிடி இல்லே? உங்களைச் சந்திச்சப்புறம் நீங்க தான் எனக்கு துணைன்னு நான் நினைச்சிட்டிருக்கேன்.' * .

  • = - - - - s : *

'ஒண்ணு என் வார்த்தையை நம்புங்க. அல்லது இப்ப விழுந்து கதறும் கண்ணிரையாவது நம்புங்க. நான் மனசறிஞ்சு உங்களுக்குத் துரோகம் செய்ய மாட்டேன்.'

மீண்டும் அவளுடைய பூப்போன்ற முகமும், இதழ் களின் ஈரமும், கண்ணிரும் தன் பாதங்களை நனைப்பதை மூத்துக்குமரன் உணர்ந்தான். அவனுடைய மனம் இளகியது. அவளை மறப்பதற்காகத்தான் எதிரே இருக் கும் மதுவை அவன் நாடினான். அவளோ சில விநாடி களுக்குள்ளே மதுவையே மறக்கச் செய்து விட்டாள். எதிரே மது இருக்கிறது என்ற நினைவே இல்லாதபடி தன் னுடைய கண்ணிரால் அவனை இளகச் செய்திருந்தாள் அவள்.

தன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் அவளு டைய கூந்தலின் நறுமணத்திலும், மேனியின் வாசனை களிலும் கிறங்கினான் அவன். கண்ணிர் மல்கும் அவளு டைய அழகிய விழிகள் எழுதிய சித்திரத்தைப் போல் அவ னுடைய உள்ளத்திற்குள் புகுந்து பதிந்து கொண்டன.

'நடந்தாவது வீட்டுக்குப் போகலாம். ஆனா நீங்க மட்டும் துணைக்குக் கூட வரணும்னு சொன்னப்ப இருந்த ரோஷம் அப்புறம் எங்கே போச்சோ தெரியலே?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/174&oldid=560971" இலிருந்து மீள்விக்கப்பட்டது