பக்கம்:சமுதாய வீதி.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 179

அவசரமாகக் குளித்து உடை மாற்றிக் கொண்டு புறப் படத் தயாரானாள் அவள்.

சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு இன்னும் சில நாட் களே இருந்தன. அதற்குள் எல்லா ஏற்பாடுகளையும் செய்தாக வேண்டும். nன்கள், ஸெட்டிங் அயிட்டங்கள் ஆகியவற்றுடனும்-விமானத்தில் கொண்டு போக முடி யாத வேறு கனமான நாடகப் பொருள்களுடனும் பதினைந்து இருபது பேர் இன்னும் இரண்டு நாட்களில் கப்பலில் புறப்பட இருந்தார்கள். விமானத்தில் குறைந்த கினமுள்ள பொருள்களை மட்டுமே கொண்டு போக வேண்டுமென்று திட்டமிடப்பட்டிருப்பதால்-ஒரு வேளை

அதிகப்படியான பு ட ைவ துணிமணிகளைக்கூடக் கப்பலில் முன்கூட்டியே கொடுத்தனுப்பிவிட வேண்டி யிருக்கும். ஆகவேதான் கோபால் சொன்னவுடன்

தட்டிச் சொல்லாமல் உடனே புடவை கடைக்குப் போக ஒப்புக் கொண்டிருந்தாள் அவள். கோபாலின் குழு மலேயாவில், முத்துக்குமரனால் எழுதிப் புதிதாக அரங் கேற்றப்பட்ட சரித்திர நாடகத்தைத் தவிர வேறு இரண் டொரு சமூக நாடகங்களையும் போட வேண்டியிருந் தது. அந்த சமூக நாடகங்களை எப்போதோ தொடக்க நாட்களில் கோபாலும், மாதவியும் நடித்திருந்தார்களா யினும் மறுபடி அவற்றை நடிப்பதற்குத் தயாராக வேண்டிய நிலையில் அவர்கள் இருந்தார்கள். கழைக் கூத்தியின் காதல்-என்ற சரித்திர நாடகத்தை மட்டுமே அப்துல்லா பார்த்து ஒப்பந்தம் செய்திருந்தாலும் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் வெளிநாட்டு நகரங் களில் அந்த ஒரே நாடகத்தை நடத்துவதிலுள்ள சிரமங் களை உணர்ந்தே வேறு நாடகங்களையும் இடையிடையே சேர்க்க வேண்டியிருந்தது. சமூக நாடகம், சரித்திர நாடகம் எல்லாவற்றிலும் மாற்றி மாற்றி மாதவிதான் கதாநாய கியாக நடிக்க வேண்டும். அதனால் அந்தப் பாத்திரங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/181&oldid=560979" இலிருந்து மீள்விக்கப்பட்டது