பக்கம்:சமுதாய வீதி.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 18 H

'சொல்லுதே! சும்மாவா? கமக மணில்வ சொல் லுது-’’

ஆவள் பதிலொன்றும் பேசாமல் புன்னகை புரிந்தாள். "எங்கியோ வெளியிலே கிளம்பிட்டாப்ல இருக்கு." "ஆமாம்! உங்களையும் அழச்சிட்டுப் போகலாம்னு தான் வந்திருக்கேன்.'

" நானா? நான் எதுக்கு? இப்ப என்னைக் கூப்பிட் டப்புறம் பாதி தூரம் போனதும் வேற யாரோடவாவது காரிலே ஏறிப் போயிடறதுக்கா?'

'உங்களுக்கு என் மேலே கொஞ்சம்கூட இரக்கமே கிடையாதா? இன்னம் அதையே சொல்லிக் குத்திக்காட் டிக்கிட்டிருக்கீங்களே...'

நடக்கறதைச் சொன்னேன்...' 'அப்படி அடிக்கடி சொல்லிச் சொல்லிக் காட்டற திலே என்னதான் இருக்கோ! தெரியலே...'

‘'நீ செய்யலாம்? அதை நான் சொல்லிக் காட்டக் கூடாதா என்ன?’’

'தப்புச் செய்யறவங்களை மன்னிக்கிறதுதான் பெருந்தன்மைம்பாங்க...”*

"அந்தப் பெருந்தன்மை எனக்கு இல்லைன்னுத்ான் வச்சுக்கயேன்...' - -

"சும்மா முரண்டு பிடிக்காதீங்சு...நான் ஆசையோட கூப்பிடறேன்.மாட்டேன்னு சொல்லி என் மனசைச் சங்கடப்படுத்தாமே புறப்பட்டு வாங்க...'

" அப்பப்பா...இந்தப் பொம்பளைங்களோட பழக றது எப்பவுமே...'

பெரிய வம்புதான்னு வச்சுக்குங்களேன்' என்று 2 iسدی .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/183&oldid=560981" இலிருந்து மீள்விக்கப்பட்டது