பக்கம்:சமுதாய வீதி.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 夏37

மட்டும் வராமப் போயிருந்தேன்னா எப்படி நினைப்பே நீ?-' -

'அப்படி ஒண்ணைக் கற்பனை செய்யவே என்னாலே முடியலே-’’

"அப்படி நடந்திருந்தா என்ன செய்வே? அதைத் தான் நான் இப்பக் கேக்கிறேன்!"

'அப்படி நடந்திருந்தா என் முகத்திலே சிரிப்பையே பார்க்க முடியாது. நான் ஏறக்குறைய நடைப்பிணமாப் போயிருப்பேன்."

'என்ன இருந்தாலும் இப்பக் கோபால் இங்கே வரலேங்கறதுலே உனக்கு ஏமாற்றம்தான்...”

"அப்படித்தான் வச்சுக்குங்களேன்-'

鯊 曾 眾 影 沙 & h 帜 姓 旁豫 é

நான் வந்திருக்கேன்ங்கிறது ஒரு பெருமையா என்ன, கோபாலைப் போல ஸ்டேட்டஸ் உள்ள பெரிய நடிகன் வந்தா உனக்கும் பெருமை, அக்கம்பக்கத்தாருக் கும் அது கம்பீரமாகத் தெரியும்...'

"நீங்க சும்ம. இருக்காமே என் வாயைக் கிண்ட நீங்க? கோபால் சார் வரலேங்கிறதிலே எனக்கு வருத்தந் தான். ஆனா அவரு வராத அந்த வருத்தம் நீங்க இப்ப இங்கே வந்திருக்கிற சந்தோஷத்துக்கு ஈடானதான்னு: கேட்டீங்கன்னா இல்லைன்னுதான் சொல்வேன்.”

‘'நீ ஒரு உபசாரத்துக்கு இப்படிச் சொல்றே. அப்ப டித்தானே?" • .

"என் பிரியத்தைச் சந்தேகிச்சா நீங்க நிச்சயமா நல்லா இருக்க மாட்டீங்க...'

"இப்படி ஒரு சாபமா எனக்கு?’’ சாபம் ஒண்னும் இல்லே. நீங்க துணைக்கு வர்ரிங் கங்கற நம்பிக்கையில தான் நான் இந்தப் பிரயாணத் துக்கே ஒப்புத்துக்கிட்டேன்-'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/189&oldid=560988" இலிருந்து மீள்விக்கப்பட்டது