பக்கம்:சமுதாய வீதி.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亨9会 சமுதாய வீதி

உற்றுப் பார்ப்பது அவனுக்குப் பெருமையாயிருந்தது.

மாதவியிடமும், கோபாவிடமும் பழகியது போல் அப்துல்லா முத்துக்குமரனிடம் அத்தனை மலர்ச்சியா கப் பழகவில்லை. அதற்குக் காரணம் சென்னைக்கு அவர் வந்திருந்த போது நிகழ்ந்த சம்பவங்களாக இருக் கலாமென்று தோன்றியது. முத்துக்குமரன் மாதவியிடம் கூறினான்:

"கூட்டத்திலே நான் எங்கியாவது தவறிப்போயி நீங்களும் அதை மறந்து பேசாம இருந்திட்டா புது ஊர்ல என்ன செய்யிறதுன்னு பயமாயிருக்கு...'

"அப்படியெல்லாம் ஒண்ணும் ஆயிடாது. எங் கண்ணுதான் நேராகவும் திருட்டுத்தனமாகவும் இடை விடாம உங்களைப் பார்த்துக்கிட்டே இருக்கே...'

'எல்லார் கண்ணும் உன்னைப் பார்க்கறப்ப நீ என்னை மட்டுமே எப்படிக் கவனிச்சுக்கிட்டிருக்க முடியும்?’’

"கவனிக்கிறேனே! அதுதான் எனக்கே புரியலே. என்ன சொக்குப்படி போட்டு என்னை மயக்கினிங் களோ தெரியவியே-’’

அவள் இப்படிப் பேசியது அவனுக்குப் பெருமையா யிருந்தது. சிங்கப்பூர் விமான நிலையத்தில் லவுஞ்சி லேயே முக்கால் மணி கழித்தபின் வேறு விமானத்தில் பினாங்குக்குப் புறப்பட்டார்கள் அவர்கள். பினாங்குக் குப் புறப்பட்ட மலேஷியன் ஏர்வேஸ் விமானத்தில் அப் துல்லாவும் கோபாலும் கேபின் அருகில் முன் வரிசையில் தனியே அமர்ந்து பேசத் தொடங்கிவிட்டதால், முத்துக் குமரனும் மாதவியும் பின்னால் நாலு வரிசை தள்ளி அமர்ந்து பேச முடிந்தது. விமானத்தில் கூட்டமே இல்லை. மாதவி அவனிடம் கொஞ்சலாகப் பேசினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/196&oldid=560995" இலிருந்து மீள்விக்கப்பட்டது