பக்கம்:சமுதாய வீதி.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 20 I

பெனி கோபாலாக இல்லைங்கிறது மட்டும் எனக்குப் புரி யுது. உன்னை அப்துல்லாவோ அல்லது எவனோ ஒரு தோலான் துருத்தியோ மதிக்கணும்னா, நீ ஒரு கலைஞன் கிறதுக்காக மதிக்கனுமே ஒழிய-உன் கிட்ட இருக்கிற நாலு பொம்பளைகளை அந்தத் தோலான் துருத்திக்கு முன்னாலே நிறுத்திப் பல்லிளிக்க வச்சு அதிலேருந்து நீ மதிப்பைத் தேடிக்கிட்டிருக்கே.'

அவர்கள் பேச்சினிடையே எங்கெங்கே விமானம் இறங்கி ஏறியதென்று கூடக் கவனிக்கவில்லை இருவரும்.

விமானம் கோலாலும்பூரில் சுபாங் இண்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்டில் இறங்கிய போது மட்டும்,

இங்கே சிலபேர் மாலைபோட வந்திருப்பாங்க, லவுஞ்சி வரை போயிட்டுத் திரும்பிடுவம் வாங்க’’ என்று அப்துல்லாவே வந்து கூப்பிட்டார். கோபால் போனான். மாதவி தயங்கி நின்றாள், முத்துக்குமரன் nட்டிலிருந்தே எழுந்திருக்கவில்லை, அவன் மாதவிக்கு கூறினான்.

"நான் வரலே! எனக்கு யாரும் மாலை கொண்டாந் திருக்க மாட்டாங்க. நீ போயிட்டு வா.'

அப்ப நானும் போகலே.'

அப்துல்லா மறுபடி விமானத்திற்குள் ஏறி, "டோண்ட் கிரியேட் எ ஸின் ஹியர், பிளீஸ் டு கம்’-என்றார்.

அவள் அவரைப் பின் தொடர்ந்தாள். அவரும் மாதவியை மட்டும் கூப்பிட்டாரே ஒழிய முத்துக்குமரன் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

கோலாலும்பூர் விமான நிலையத்தில் சந்திக்க வந்தி ருந்தவர்கள் போட்ட மாலைகளுடனும், கொடுத்த பூச் செண்டுகளுடனும் கோபால், அப்துல்லா, மாதவி மூவரும் மீண்டும் விமானத்தில் ஏறி வந்தார்கள். கோபால் அப் போதுதான் முத்துக்குமரன் விமானத்திற்குள்ளேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/203&oldid=561003" இலிருந்து மீள்விக்கப்பட்டது