பக்கம்:சமுதாய வீதி.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 8 சமுதாய வீதி

வைத்தே பேசினான் அப்துல்லா. மாதவியோ இன்னொ ருத்தர் முகத்தைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரிக்க வேண்டு மென்றால் கூட இப்போதெல்லாம் அதற்கு அனுமதி கேட்பது போல் முதலில் முத்துக்குமரனின் முகத்தைத் தயக்கத்தோடு ஏறிட்டுப் பார்க்கிறாள் என்பதைக் கவ. னித்து வைத்திருந்தான் கோபால். சூழ்நிலை இப்படி யெல்லாம் திரும்பும் என்பதை அவன் எதிர்பார்க்க வில்லை, எதிர்பார்த்திருந்தால் முத்துக்குமரனை அவன் இந்தப் பயணத்திற்குக் கூப்பிடாமலே தவிர்த்திருக்க முடியும். முன்பே திட்டமிட்டு அப்படிச் செய்யாதது தன் தவறுதான் என்று இப்போது அவனுக்குத் தோன்றி to 35.

'காக்டெய்ல் மிக்ஸ் செய்து டிரேயில் நான்கு அழகிய கிளாஸ்களில் எடுத்துக்கொண்டு திரும்பிய அப்துல்லா அங்கே கோபாலைத் தவிர வேறு யாரையுமே காணாமல் திகைத்தார்.

'அவுங்க எங்கே? நாலு பேருக்குக் கலந்திட்டேனே?"

தெரியலே? கீழே இறங்கிப் போனாங்க. உலாவப் போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்...'

இருக்கச் சொல்லி நீங்களே வற்புறுத்திச் சொல்லி யிருக்கலாமே மிஸ்டர் கோபால்...? அந்த வசனக்காரன்... அதான் ஒரு திமிரு பிடிச்ச ஆளு-அவளை விடாமல் சுத்திக்கிட்டிருக்கானே; அவனுக்கு ஒரு கிளான ஸ்க் கொடுத்து ரெண்டு மடங்கு உள்ளே தள்ளச்சொன்னா அப்புறம் அவளும் தானா வழிக்கு வருவா...'

கோபால் இதற்கு மறுமொழி கூறவில்லை. அப்துல் லாவே மீண்டும் கூறலானார்:

'இந்த மாதிரி டிரிப் லே இப்படி ஆட்கள் இருந்தாங் கன்னா டிரிப்பே குட்டிச் சுவராயிடுமே; கம்பெனி'க்கு ஒத்துப்போற ஆளா இருக்கணும். முரண்டும் திமிரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/210&oldid=561010" இலிருந்து மீள்விக்கப்பட்டது