பக்கம்:சமுதாய வீதி.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 2 : :

காப்பதுபோல் மாதவியையே சுற்றிச் சுற்றி வந்தார். முத்துக்குமரன் அவளோடு கூடவே இருந்தது அவருக்குப் பெரிய இடையூறாக இருந்தது. நாளுக்கு நாள் அவன்மீது அவருடைய வெறுப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. தான் மாதவியோடு பேசவோ நெருங்கிப் பழகவோ முடி யாமல் அவன் பெரிய போட்டியாகவே இருக்கிறானென்று அவருக்குத் தோன்றியது.

முதல் நாள் நாடகம் வெற்றிகரமாக நடந்து முடிந் தது. அன்றிரவு அப்துல்லாவுக்கும் முத்துக்குமரனுக்கும் நேரிடையாகவே ஒரு மனஸ்தாபம் நேர்ந்தது. நல்ல வசூல் ஆகியிருந்ததனாலும் நகரமண்டபம் கொள்ளாமல் கூட் .டம் நிறைந்திருந்ததனாலும் அத்தனைக்கும் காரணமான அப்துல்லாவின்மேல் கோபாலுக்கு மிகுந்த பிரியம் உண் டாகியிருந்தது; நாடகம் முடியும்போது இரவு பதினொரு மணி ஆகிவிட்டது. நாடக முடிவில் எல்லாரையும் மேடைக்கு வரவழைத்து மாலை சூட்டியும், அறிமுகப் படுத்தியும் நன்றி கூறிய அப்துல்லா-முத்துக்குமரனை மட்டும் மறந்தாற்போல் விட்டுவிட்டார். அவருக்கு மறக்க வில்லை என்றாலும் பிறர் அதை மறதியாக எண்ணிக் கொள்ளட்டும் என்பதுபோல் வேண்டுமென்றே விட்டு விட்டார். கோபாலுக்கு நினைவிருந்தது, அப்துல்வாவின் செய்கைகளில் குறுக்கிட்டுக் கூறப் பயந்தவன் போல அவ லும் சும்மா இருந்துவிட்டான். மாதவி மட்டும் மனம் குமுறினாள். அவர்கள் எல்லாரும் திட்டமிட்டுக்கொண்டு சதி செய்வதுபோலத் தோன்றியது அவளுக்கு.

நாடகம் முடிந்தபின் பினாங்கிலுள்ள பெரிய பணக் காரர் ஒருவர் வீட்டில் அன்றிரவு அவர்கள் விருந்துண்ண ஏற்பாடு செய்திருந்தார் அப்துல்லா.

நாடகம் நடந்து முடிந்ததும் அங்கிருந்தே அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தார், விருந்துண்ண அமைத் திருந்த செல்வந்தர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/223&oldid=561024" இலிருந்து மீள்விக்கப்பட்டது