பக்கம்:சமுதாய வீதி.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3 4. சமுதாய வீதி

வாகிய நடிக்கு கிடைக்காதது இந்தப் பஞ்சைப் பயலுக் குக் கிடைக்கிறதே-என்று அப்துல்லா என்மேல் பொறா மைப்படப் போகிறான்-'

'அதொண்ணுமில்லே! எனக்கு நீங்கதான் ராஜா

'சொல்றதை மட்டும் இப்பிடிச் சொல்லிப்பிடு. ஆனா மேடை மேலே கதாநாயகியா வர்ரப்ப வேற எந்த ராஜாவுக்கோதான் ராணியா நீ நடிக்கிறே?’’

'பார்த் தீங்களா, பார்த்தீங்களா? இதுக்குத்தான் நான் முன்னாடியே பயந்து பயந்து அப்பப்ப வேண்டிக்கி றேன். மேடை மேலே நான் யாரோட நடிக்கிறேன், எப்ப எப்ப நெருக்கமா நடிக்கிறேன்னு கவனிச்சு என் னைக் கோவிச்சுக்காதிங்கன்னு பல தடவை சொல்வியிருக் கேன். இருந்தும் நீங்க அதையே திரும்பத் திரும்பச் சொல்விக் காமிக்கிறீங்க. அதுக்கு நான் என்ன பண்ணு வேன்? மேடையிலேகூட நீங்கதான் என்னோட கதாநாய கரா நடிக்கணும்னு நான் ஆசைப்படத்தான் செய்யி றேன். நீங்க கதாநாயகரா நடிக்கிறதா இருந்தா உங்க அழகு வேறெந்தக் கதாநாயகருக்கும் வராது...'

'போதும்! ரொம்ப அதிகமாகக் காக்காய் பிடிக் காதே...'

'இனிமேல் காக்காய் பிடித்து ஆகவேண்டியதில்லை, உங்களை ஏற்கெனவே நான் முழுக்க முழுக்கக் காக்காய் பிடிச்சாச்சு. :

'சரி சரி! போதும், உன் பேச்சும் நீயும். நாம் கடைக்கு எதுக்கும் இங்கே போக வேண்டாம். எல்லா ஷாப்பிங் கையும் புறப்படறப்ப சிங்கப்பூர்லே வச்சுப் போம்.’’ என்று அவன் கூறியதை அவள் ஒப்புக் கொண் டாள். தங்களிடம் அப்துல்லாவும் கோபாலும் எவ்வ ளவு வித்தியாசமாக நடந்து கொண்டாலும் தாங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க் கூடாது என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/236&oldid=561037" இலிருந்து மீள்விக்கப்பட்டது