பக்கம்:சமுதாய வீதி.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 2.3 9.

வெளியே ஒடிவிட்டாள். நேரே முத்துக்குமரனின் அறைக் குப் போய்க் கதவைத் தட்டினாள் மாதவி. முத்துக்குமரன் எழுந்து வந்து கதவைத் திறந்தவன் அவளிருந்த பதற்ற மான நிலையைக் கண்டு திகைத்தான்.

'ஏன் இப்படி உடம்பு நடுங்குது? என்ன நடந் துச் சு?’’

'உள்ளே வந்து சொல்றேன்-என்று கூறிவிட்டு அவனோடு அவனறைக்குள் சென்றாள் மாதவி.

கதவைத் தாழிட்டுவிட்டு உள்ளே சென்று அவளை உட்காரச் சொன்னான் முத்துக்குமரன். குடிக்கத் தண் னிர் கேட்டாள் அவள். அவனே எழுந்து சென்று ஜக்” கிலிருந்து தண்ணிர் எடுத்துக் கொடுத்தான். தண்ணி ரைப் பருகிய பின் நடந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் அவனிடம் சொன்னாள் அவள்.

எல்லாவற்றையும் கேட்டுப் பெருமூச்சு விட்டான் அவன். சில விநாடிகள் அவளுக்கு என்ன மறுமொழி சொல்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை. அவள் திடீ. ரென்று விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள். வெடித் துப் பொங்கி வந்த அழுகை அவன் இதயத்தைப் பிசைந் தது. அவள் அருகே சென்று பட்டுக் கருங்கூந்தலைக் கோதியபடியே ஆறுதலாக அரவணைத்தான் அவன், அவ னுடைய அரவணைப்பில் அவள் பாதுகாப்பைக் கண்டது போல் உணர்ந்தாள். நீண்ட நேரத்திற்குப்பின் அவன் அவளிடம் கூறினான்:

'சமூகத்தின் ஒவ்வொரு துறையும் இன்றைக்கு ஒரு பெரிய வீதியாக நீண்டிருக்கிறது. அவற்றில் சில வீதிகளில் நடந்து செல்கிறவர்களுக்குப் பாதுகாப்புக் குறைவு; பிர காசம் அதிகம். சமூகத்தின் இருண்ட வீதிகளில் நடப்பதை விட அதிகமான திருட்டுக்களும் வழிப்பறிகளும் பிரகாச மான வீதியில்தான் மிகுதியாக நடைபெறுகின்றன. பிர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/241&oldid=561042" இலிருந்து மீள்விக்கப்பட்டது