பக்கம்:சமுதாய வீதி.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 罗59、

‘'எது தெரிஞ்சா என்ன, தெரியாட்டி என்ன? மனித னோட உயர்ந்த மொழி பிறரிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும்போதுதான் பேசப்படுகிறது. அது தெரிஞ்சாலே போதும். அது தெரியாதவங்களுக்கு எத் தனை மொழிகள் தெரிந்தாலும் பயனில்லை. துக்கப்படற போது ரெண்டு சொட்டுக் கண்ணிரும் சந்தோஷப்படற போது ஒரு புன்னகையும் பதிலாக எங்கிருந்து கிடைக் குமோ அங்கேதான் எல்லா மொழிகளும் புரியற இதயம் இருக்கு.’’

கோபால் மேலும் ஒரு வாரம் ஒய்வுகொள்ள வேண்டு மென்று டாக்டர் கூறிவிடவே மலாக்காவில் நடைபெற வேண்டிய நாடகங்களிலும் முத்துக்குமரனே நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முத்துக்குமரனும் குழுவின ரும் காரிலேயே மலாக்காவுக்குப் புறப்பட்டனர். கோபா லைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ருத்ரபதி ரெட்டி யாரிடம் விடப்பட்டிருந்தது.

மலாக்காவில் தங்கியிருந்தபோது ஒரு நாள் பகலில் போர்ட் டிக்ஸன் கடற்கரைக்குப் போய் சுற்றிப் பார்த்து விட்டு வந்தார்கள் அவர்கள். மலாக்காவிலும் நாடகங் களுக்குப் பிரமர்தமான வசூல் ஆயிற்று. முத்துக்குமரனின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறியது-குழுவுக்கு நல்ல பேர் கிடைக்க அவன் ஒருவனே காரணமாயிருந்தான். மலாக்காவில் நாடகங்கள் முடிந்ததும் திரும்புகிற வழியில் சிரம்பானில் ஒரு நண்பர் வீட்டில் விருந்துக்கு அழைத்தி ருந்தார்கள். விருந்து முடிந்ததும், அந்த விருந்தை அளித் தவர் மூலமாக அப்துல்லா தாம் முன்பு கொடுத்து மறுக்கப் பட்ட அதே வைரமோதிரத்தைத் திரும்பவும் கொடுக்கச் செய்தார். முத்துக்குமரனுக்கு அவர் ஏற்பாடு புரிந்தது. தாம் நேரே கொடுத்தால் மறுக்கிறானே என்று சிரம் பான் நண்பர் மூலம் விருந்துக்கு ஏற்பாடு செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/261&oldid=561063" இலிருந்து மீள்விக்கப்பட்டது