பக்கம்:சமுதாய வீதி.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 0 சமுதாய வீதி

அப்துல்லா சுற்றி வளைத்து அதே மோதிரத்தைக் கொடுக்க வருவதை அவன் அறிந்திருந்தும் பலருக்கு முன்னே அவரை அவமானப்படுத்த விரும்பாமல் வாங்கிக் கொண்டான்.

சிரம்பானிலிருநது கேர்லாலும்பூர் திரும்பியதும் முதல் வேலையாக அதை அவரிடம் திருப்பிக் கொடுத் தான்.

"இதோ பாருங்க மிஸ்டர் அப்துல்லா! நீங்க எதைக் கொடுத்தும் என் பிரியத்தை விலைக்கு வாங்க முடியாது. நான் உங்ககிட்டே இருந்து எதையும் எதிர்பார்த்தே நடிக் கலை. எனக்கு உங்களுடைய காண்ட்ராக்ட் லாபமா, நஷ்டமாங்கிறதைப் பத்திக்கூட கவலையில்லை. என் சிநேகிதனோட நான் மலேயாவுக்கு வந்தேன். அவன் ஒரு கஷ்டத்தில் இருக்கறப்ப உதவறது என் கடன்ம. அதைத் தவிர வேறெந்த ஆசைக்காகவும் இதை நான் செய்யவே. நீங்க எது செய்யணும்னாலும் கோபாலுக்குத்தான் செய். யணும். சிரம்பானிலே நாலு பேர் முன்னாலே உங்களை அவமானப்படுத்தக்கூடாதுன்னுதான் இதை வாங்கிக் கொள்வதுபோல் நடித்தேன். எனக்கு இங்கிலீஷ் தெரி யாது. ஆனால் பெருந்தன்மை தெரியும். நான் ரொம்ப மானஸ்தன். ஆனா அதுக்காக இன்னொருத்தனை. அவ. மானப்படுத்த மாட்டேன். மன்னிச்சுக்குங்க. இதை நான் திருப்பிக் கொடுக்கத்தான் வேண்டியிருக்கு-" -

என்னை ரொம்பச் சங்கடப்படுத்தறிங்க, மிஸ்டர் முத்துக்குமார்!’ -

"சே! சே! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே...'

அப்துல்லா தலையைத் தொங்கப் போட்டபடியே

மோதிரத்தை வாங்கிக்கொண்டு போனார். ஆணோ பெண்ணோ விலைக்கு வாங்க முடியாத மனிதர்களைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/262&oldid=561064" இலிருந்து மீள்விக்கப்பட்டது