பக்கம்:சமுதாய வீதி.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.2 சமுதாய வீதி

ஒரு பெரிய மனுஷனை நாம் பகைச்சுக்கக் கூடாது. அப் பிடித்தானே?’’

'அப்துல்லா உன்னை அவமானப்படுத்தியிருக் கார்னே வச்சுக்க. அப்படியிருந்தாலும்...'

சே! சே! இன்னொருவாட்டி சொல்லாதே. என்னை அவமானப்படுத்தறதுக்கு அவன் இல்லே, அவனோட பாட்டன் வந்தாலும் முடியாது. அவமானப்படுத்தறதா நெனைச்சுக்கிட்டு ஏதேதோ சில்லறை விஷமங்கள் பண் ணிைனாரு; அவ்வளவுதான்.'

'இருந்தாலும் இவ்வளவு ரோஷம் உனக்கு ஆகாது வாத்தியாரே!'

'அது ஒண்ணுதான் ஒரு கலைஞனுக்கு நிச்சயமா மீத மிருக்கப் போற விஷயம். அதையும் விட்டுட்டா அப் புறம் எப்பிடி?’’

'அப்துல்லா எங்கிட்ட வந்து சொன்னாரு, மோதி ரத்தை எப்பிடியாவது அவரை வாங்கிக்கச் செய்யனும் னாரு.'

'அதுதான் நான் அவரிட்டவே சொன்னேனே. எது செய்யணும்னாலும் கோபால்கிட்டச் செய்யுங்க. எனக் கும் உங்களுக்கும் நேரே ஒரு சம்பந்தமும் இல்லேன் னேனே? சொல்லவியா உங்கிட்ட?’’

'சொன்னாரு. சொல்லிட்டு மோதிரத்தையும் எங் கிட்ட கொடுத்திட்டுப் போயிருக்காரு...'

"அப்ப்டியா? 'அப்துல்லாகிட்ட மோதிரத்தை வாங்கிக்கக்கூடாது, ருத்ரபதி ரெட்டியாரிட்டக் கைக்கடிகாரம் வாங்கிக்க «orrLorr?”

"ருத்ரபதி ரெட்டியாரும், அப்துல்லாவும் ஒண்ணா யிட மாட்டாங்க. ரெட்டியாரு இன்னிக்கிக் கோடீசுவர னாகியும் எங்கிட்ட ஒரு வித்தியாமும் இல்லாமப் பழக றாரு.’’ -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/264&oldid=561066" இலிருந்து மீள்விக்கப்பட்டது