பக்கம்:சமுதாய வீதி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

கற்கும்போது இதுபோன்ற கவிதையை நாமும் இயற்றிவிடலாம் போலிருக்கிறதே" என்ற பிரமையைத் தோற்றுவித்து இயற்ற முயலும்போது பிடிக்குள் அடங்காமல் நழுவி நழுவிச் சென்றுவிடும் ஆற்றல் படைத்ததே சிறந்த கவிதையென்று அறிஞர்கள் கூறியிருக் கிறார்கள், -

சமுதாய வீதி என்ற இந்த நாவலும் ஒரு விதத்தில் நமக்கு பிரமையைத் தோற்றுவிக் கிறது. இதில் வரும் பாத்திரங்களையெல்லாம் நேற்றோ, இன்றோ, சில நாட்களுக்கு முன்போ நாம் சந்தித்துப் பழகியிருப்பது போன்ற ஒரு பிரமை தோன்றுகிறது. ஆனால் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் யாரையும் இனங் கண்டுகொள்ள முடியவில்லை. இதுதான் இந்

நாவலின் தனிச் சிறப்பு.

இக்கதையின் நாயகர்களான முத்துக் குமரனும் மாதவியும் மட்டுமே சிறந்தவர்கள் என்று கூறிவிட முடியுமா? இதில் வில்லன் போல் தோன்றச் செய்த கோபால் எவ்வளவு சிறந்த குணச்சித்திரமாகப் ப ைடக்கப் பெற்றிருக்கிறான். அவன் ஆடம்பர வாழ்விற் காக-பெருமைக்காக நல் உணர்வுகளை மட்டும் அடக்கிக்கொள்ளவில்லை. இளமையில் ஏற்பட்டு விட்ட பண்பின் காரணமாகத் தீய உணர்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/5&oldid=560796" இலிருந்து மீள்விக்கப்பட்டது