பக்கம்:சமுதாய வீதி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 5i

ஆச்சரியம்தான்!-என்பதாகத் தோன்றியது முத்துக்குமர லுக்கு.

காலையில் நாடகம் எழுதச் சொல்லிவிட்டுப் பகவில் பத்திரிகைக்காரர்களைக் கூப்பிட்டு விளம்பரம் செய்யும் இந்தச் சாமார்த்தியமும், வேகமும்தான் பட்டினத்தில் வெற்றி பெற வழிகள் போலும் என்று ஒரு கணம் அவ லுக்குள்ளேயே ஒரு மலைப்பு உண்டாயிற்று. ஒரு திறமையான காரியத்தைச் செய்வதோடு ஒடுங்கிவிடாமல் "நான் செய்வதுதான் திறமையான காரியம்-என பத்துப் பேரைக் கூப்பிட்டு வைத்து விருந்துபசாரத்தோடு அழுத் திக் கூறி அனுப்பும் சாமர்த்தியமும் இந்த நகரில் வேண் டும் போலும் என்று நினைத்துக் கொண்டான் அவன், பகல் இரண்டு மணியிலிருந்து ஒரு முக்கால் மணி நேரம் படுக்கையில் படுத்துப் புரள்வதில் கழிந்தது. துரக்கமும் வ்ரவில்லை. நாயர்ப்பையன் கொண்டு வந்து போட்டி ருந்த தமிழ் காலைத் தினசரியைப் படிப்பதில் அந்த நேரம் போயிற்று. - . i

இரண்டே முக்கால் மணிக்கு எழுந்து முகம்கழுவி உடை மாற்றிக்கொண்டு தயாரானான் அவன், அறைக் கதவை யாரோ மெல்லத் தட்டினார்கள்.

முத்துக்குமரன் கதவைத் திற்ந்தான். மல்லிகைப் பூ வாசனை குப்பென்று வந்து தாக்கியது. பிரமாதமாக அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தாள் மாதவி, இதழ் களில் லிப்ஸ்டிக்கைப் பூசி அழித்தது போலிருந்தது. முத்துக்குமரன், முகம் மலர்ந்து அவளை வர்வேற்றான்.

"நீயாக்த்தர்ன் இருக்க வேண்டும் என்று நினைத் தேன்...'

蘇 ‘எப்படி?’’

கதவைத் தட்டிய விதம் மிக நளினமாக மிருதங்கம் வாசிப்பது போல் இருந்தது.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/53&oldid=560846" இலிருந்து மீள்விக்கப்பட்டது