பக்கம்:சமுதாய வீதி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சமுதாய வீதி

நிச் சுற்றி முத்துக்குமரனுக்குப் பக்கத்திலேயே சிரித்துக் கொண்டு நின்றாள். பெண் விருந்தினர்களை எதிர் கொண்டு அழைத்து வந்து அவள் அவனுக்கு அறிமுகப் படுத்தி வைத்தாள். விருந்துக்கு வந்திருந்த வசனகர்த்தாக் களிலே ஒருவன் முத்துக்குமரனை ஏதோ மட்டந்தட்ட விரும்புகிற பாணியில் கேட்பவன் போல்,

'இது தான் உங்க முதல் நாடகமா? இல்லே...முன்னே ஏதாவது எழுதியிருக்கீங்களா...", -என்பது போல் கேட்டான். முதலில் கேள்வியைக் காதில் வாங்காதது போலவே கோபத்தோடு சும்மா இருந்தான் முத்துக் குமரன்.

மறுபடியும் அதே அலட்சியத்தோடு அதே கேள்வி யைக் கேட்டான் வசனகர்த்தா. முத்துக்குமரன் அவனை மடக்க விரும்பினான்.

"'உங்க பேரென்னன்னு சொன்னிங்க?...' 'வசனப்பித்தன்.' "இதுவரை எத்தினி படத்துக்கு வசனம் எழுதி யிருக்கிங்க...?"

  • நாற்பதுக்கு மேலிருக்கும்...'. "அதுதான் இப்படிக் கேக்கநீங்களோ? -என்று அந்த ஆளைப் பதிலுக்கு மடக்கியதும் அவன் மிரண்டு போனான். திமிரோடு கேள்வி கேட்ட அவனை முத்துக் குமரன் பதிலுக்கு மடக்கிக் கேட்ட போது, ஒர் ஆசிரிய ருக்கு மறுமொழி சுற்ம் மாணவனைப் போல் அவன் பயந்து பயந்து பதில் கூறியதை மர்தவி அருகிலிருந்து இரசித்தாள். முத்துக்குமரனின் அகம்பாவத்தையும், கர்வத்தையுமே அவள் காதலித்தாள். அந்த அகம்பாவ மும், கர்வமுமே அவளை அவனுக்காக நெகிழச் செய் தன. காபி, சிற்றுண்டி முடிந்ததும் கோபால் எழுந்து முத்துக்குமரனை விருந்தினர்களுக்கு அறிமுகப்படுத்துகிற விதத்தில் சில வார்த்தைகள் பேசினான்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/56&oldid=560849" இலிருந்து மீள்விக்கப்பட்டது