பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அகலிகைக் கல்

எல்லாம் அடங்கிய தாவரசங்கமமே, நித்திரையில் ஒடுங்கிப் போனதுபோல் தோன்றுமே ஒரு நேரம்... இடம், பொருள், ஏவல் என்ற முப்பரிமாண தாக்கங்களைக் கடந்த காலவுதிர் காலம்...

அந்த நேரத்தில், ஆயாவிற்கு வழக்கம்போல் விழிப்புத் தட்டிவிட்டது. ஐந்தாறு நிமிடங்கள் முந்தியும், பிந்தியும் வரும், இந்த இரண்டு மணியளவிலான நேரம், மற்றவர்களுக்கு அன்றைய இரவுக் கணக்கு. ஆனால், ஆயாவிற்கோ, அது, இருள்கவிந்த ஒரு நாளின் துவக்கம்... ஒரு நாளிற்கு பகல்தான் துவக்கம் என்பது ஆயா மறந்துபோன அல்லது மரத்துப்போன நினைவுகளில் ஒன்று. இளையவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், முதியவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் துரங்க விடாமல், அதே சமயம் முரண்பட வருமே வயது கோளாறு... அந்தக் கோளாறு ஆயாவை நெருங்க முடியவில்லை.

ஒவ்வொரு இரவும் பத்து மணியளவில் ஆயா துரங்கப் போவாள். அந்த அடுக்கு மாடி வீடுகளின் உள், வெளி விளக்குகளின் கூச்சப்பிரகாசம், ஆயாவின் விழிகளை ஊடுருவி கண்ணுக்குள் புகமுடியாது. தொலைக்காட்சிகளின் விதவிதமான ஒளிபரப்பு கூச்சல்களும் ஆயாவின் துக்கத்தை அசைத்ததில்லை. இன்னும் சொல்லப் போனால், அவையே தனது தாயின் தாலாட்டுப் போலவே ஆயாவிற்கு கேட்கும். இந்த பின்னணியே அவளை உடனே துரங்க வைத்துவிடும். படுத்த அய்ந்தாவது நிமிடம் தன்னை இழந்த தன்மைக்குப் போய்விடுவாள். உடல் களைப்பும், மனக் களைப்பும் கனவுகளை துரத்திவிடும். ஒரு வினாடி படுத்து மறுவினாடி விழிப்பதுபோல் ஆயாவிற்கு தோன்றும். துக்கம்-விழிப்பு என்ற, இந்த இரண்டு நிகழ்வுகளின் இடைவெளி எப்போதுமே அவளுக்கு இரண்டு மூன்று நிமிடங்கள் மாதிரிதான்.