பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகலிகைக் கல்

101


மாப்பிள்ளையாக்கியது, அந்த மாப்பிளைக்காரன், ஏதோ தொழில் துவங்குவதற்கு வங்கி கடனுக்காக ஆயாவிடம் வீட்டை தன் பெயருக்கு எழுதி வாங்கியது, பிறகு அதை ஒரு போக்கிரிக்கு விற்றது, தட்டிக் கேட்ட ஆயாவை, மகள், கணவனுக்கு ஒத்தாசையாக பிடித்துக் கொள்ள, மருமகன் பல்லை உடைத்து விட்டு, வெளியேறியது, வீட்டை வாங்கிய அந்த போக்கிரி, தன்னை தட்டுமுட்டுச் சமான்களோடு வெளியே துக்கிப் போட்டது, அங்கிருந்து இடறி இடறி இந்த இடத்திற்கு வந்தது, இப்போது மகள் பூக்காரியாக, மாமல்லபுரம் பக்கம் உடலை விற்று திரிவது, வெள்ளையும் சொள்ளையுமான அந்த மருமகப் பயல் இன்னொருத்தியோடு குடித்தனம் நடத்துவது - இவை அத்தனையும் ஆயாவிற்கு மெய்யாய், கொடுங்கனவாய் கண்கொத்திப் பாம்பாய் பிராண்டின.

ஆயாவிற்கு, மீண்டும் கடமை கண்ணாகியது. கால்களில் கைகளை ஊன்றி ஊன்றி நான்காவது மாடிக்கு எப்படியோ வந்துவிட்டாள். எட்டாம் நம்பர் கதவின் பக்கவாட்டுச் சுவரில் தனக்கு அத்துபடியான அழைப்புமணியின் சுவிட்சை நான்கு விரல்களை மடக்கிக் கொண்டு ஒற்றையாய் நீட்டி வைத்த ஆள்காட்டி விரலால் தொடப்போனாள். அதை அழுத்த வேண்டியதுதான் பாக்கி. ஆனாலும், சாக்கடிப்பதுபோல் அந்த விரலை மடக்கிக் கொண்டாள்.

இந்த எட்டாம் நம்பர் பொண்ணு அறியாதவள். கல்யாணம் ஆகி நாலைந்து மாசமே இருக்கும். தன் கணவன் திரும்பிப் படுத்துக் கொள்வதாக ஆயாவிடம் ஒருதடவை கையறு நிலையில், யாரிடமாவது சுமையை இறக்கி வைக்க வேண்டும் என்கிற முனைப்பிலோ என்னமோ சொல்லிவிட்டாள். முதல் மாதம் அவன் அப்படி இல்லை என்றும் அவள் பின்னுரையாகச் சொன்னாள். உடனே ஆயா ஒரு கைவைத்தியம் சொன்னாள். அதுவும் போனவாரந்தான் சொல்லிக் கொடுத்தாள். அதாவது கொதிக்கிற பாலில் இரண்டு பச்சை முட்டைகளை உடைத்து அப்படியே பாலுக்குள் கொட்டி, அதை இரு டம்ளர்களில் மேலும் கிழுமாக ஆற்ற வேண்டுமாம்... முட்டை, கூழாகி பாலுக்குள் இரண்டற