பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

சமுத்திரக் கதைகள்


வந்தவள், துண்டு துண்டாகவும், துக்கடாகவும் வந்து, அவனைத் துண்டாடுகிறாள். அவன் முகத்திற்கு மூடியாகிறாள். பின்னர் எதிர் முகம் போட்டு, அவன் முகத்தை செல்லமாக முட்டுகிறாள். நெற்றிப் பொட்டில் கிச் சிக் சுகம். உதடுகளில் ஈரம். அப்புறம், இவன் அவளோடு மானசீகமாகப் பேசப்போகிறான். அதற்குள் அவள் முந்திக் கொள்கிறாள். என்னவெல்லாமோ பேசுகிறாள். முன்பு சுகப்படுத்திய அவளது பேச்சு இப்போதோ சோகப் படுத்துகிறது.

அந்தப் போர்வை, தானாகவே, அவனை உருட்டி விட்டதுபோல் கட்டிலின் விளிம்பு வரை அவனை கொண்டுவந்து போட்டுவிட்டு, கிழே அவனைப் போலவே சுருண்டு விழுந்தது. அப்படியும், அவன் பிரக்ஞை அற்றவனாய் அசைவற்றுக் கிடந்தான். அந்தப் போர்வையை உருவித் தள்ளிய கரங்கள், அவனை, கழுத்தை பிடித்து தூக்கி கட்டில் சட்டத்தில் உட்கார வைக்கிறது. குப்புற சாயப் போனவனை, உச்சி முடியை விடாப்பிடியாய் பிடித்து, நிமிர்த்திய நிலையில் வைக்கிறது. ஆனாலும், அவன் கண்களோ, அருகே நிற்பவரை உள்வாங்காமல் திறந்தவெளியாகிறது. அதே சமயம் சிறிது நேரத்தில் உச்சி முடி வலியில், கண்களில் சித்தப்பா பதிவாகிறார். இடுப்பில் கை வைத்தபடியே, அவனை ஏகத்தாளமாக பார்க்கிறார். முழங்கால் வரை நீண்ட கால் சட்டையோடும், தொளதொளப்பான பனியன் ஜிப்பாவுடனும் நிற்கிறார். எதனையும் என்ன என்று கேட்பது போன்ற மேலெழுந்த பார்வை. ஆசையில் பாதி நரைத்துப் போனதுபோன்ற மீசை கையில் ஒரு டென்னிஸ் மட்டையை கொடுக்கலாம் போன்ற உடல்வாகு.

‘எப்போ வந்திங்க சித்தப்பா என்று தட்டுத்தடுமாறி கேட்கப்போன முத்துக்குமார், கடைசி வார்த்தையான சித்தப்பாவை, மாயாவாக்குகிறான். ஆனாலும், அவர் அதை பொருட்படுத்தாமல், அண்ணன் மகனை ஆய்வாகப் பார்க்கிறார். ஊருக்குத்தான் அவன் அண்ணன் மகன். அவரை பொறுத்த அளவில் அண்ணி மகன்தான். அண்ணனோடு வந்த உறவானாலும், அந்த அண்ணியோடு ஒப்பிடும்போது, இவருக்கு