பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைசியர்கள்

113


‘நானும் வாரேன் சித்தப்பா

சித்தப்பாவும் முத்துக்குமாரும் அந்த மேல்தள ஒற்றை அறையிலிருந்து விடுபட்டு, கிழ்த்தள வீட்டிற்கு வந்தார்கள். காலடிச் சத்தம் கேட்டு அதற்கென்றே காத்திருந்தது போல் கதவை திறந்த அண்ணி, விளக்கைப் போட்டுவிட்டு, கைகளை நெறித்தாள். கோதி முடியாத கொண்டையோடு, தாறுமாறாக தலையை கவிழ்த்த படி நின்றாள். கண்கள் நீர் மேகங்களாயின. இதை தாள முடியாத மகள் திலகா, அம்மாவை தன் மார்போடு சாத்திக் கொண்டாள். பின்னர், அம்மாவை விட்டுவிட்டு, சித்தப்பாவின் முன்னால் வந்து அவர் கைகளை பிடித்துக் கொண்டு கேவினாள்.

சித்தப்பா, ஆறுதலாக பேசுவதற்கு முன்பே, முத்துக்குமாரின் அம்மா, மைத்துனரிடம் தொலைபேசியில் சொன்னதையே சொன்னாள்.

மூணு மாசமா இப்படியே கிடக்கான். ஒவ்வொரு மாத கடைசிலேயும் எப்படியோ பாதி அளவுக்கு தேறி, முதல் தேதி ஆபீசு போறான். ஆனா மத்தியானமே லீவு போட்டுட்டு திரும்பிடுறான். பேசாம அந்த வேலையிலிருந்து அவனை நின்னுடச் சொல்லுப்பா. இவனை எங்களால காப்பாத்த முடியும்.’

அம்மாக்காரி, வெறுமையாக தன்னையும் மகனையும் மாறிமாறி பார்த்துவிட்டு, மைத்துனரை, தான் கட்டிய புடவை போல் கசிந்து நின்று பார்த்தாள். திலகா பின்னோக்கி நடந்து அம்மாவோடு ஒட்டிக் கொண்டாள். இரட்டைத்தலைகளைக் கொண்ட ஒற்றை உடம்பான தோற்றம்.

சித்தப்பா, தன்னம்பிக்கை எதிரொலிக்கும் குரலில், நன்னம்பிக்கையை காட்டும் முகபாவத்தோடு பேசினார்.

அதான் நான் வந்துட்டேனே. என் பொறுப்புல விடுங்க. டேய் முத்து! உள்ளே போய் ஜாக்கிங்கா வா. அதாண்டா... உன் குழாய் டவுசர போட்டு கேன்வாஸ் பூட்ஸோட வாடா.’

‘நான் கெட்ட கேட்டுக்கு இதுவே போதும் சித்தப்பா.'