பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலவரப் போதை

135


ஈரத்துணி, குழுவினரை நெக்கியடித்து நின்றது. பளபளப்பான வயிறு, வெள்ளை சிலுக்கு ஜிப்பாவில் மின்னியது. கண்கள் இடுக்கி இருந்தன. சித்தி தொடரில் உப்புச் சப்பு இல்லாத, அரசாங்க விதிகள் தெரியாத கலெக்டர் அம்மா என்ற கேரக்டர் வருகிறதே, அதன் அப்பா கேரக்டராக நடிப்பவருக்கு கறுப்பு தோல் போர்த்தினால் எப்படியோ அப்படிப்பட்ட தோற்றம்... அதே தோரணை.

கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் எஸ்தர், ஈரத்துணியை பயபக்தியோடு பார்ப்பதுபோல் பாவலா செய்துகொண்டே, விளக்கமளித்தாள்.

“இவனுக்கு, ஐ அம் ஸாரி... இவருக்கு, உச்சந்தலையில எப்படி... இப்படி ஒரு பள்ளமுன்னு...”

“பள்ளம் கிடக்கட்டும். நீங்கள்லாம் யாரு...?”

“நாங்க அரசாங்கக் குழு. இந்த மாவட்டத்துல, சில தனியார் நிறுவனங்கள், சித்த பிரமை பிடித்தவங்களை சிகிச்சை என்கிற பெயர்ல, சித்திரவதை செய்யுறதா கேள்விப்பட்டு, நிலைமைய நேர்ல கண்டறிய, எங்கள, அரசு, குழுவாய் அனுப்பி இருக்கு. நாங்களும் பல பட்டிகள பார்த்துட்டோம். ஆனா, இந்த வீட்ல இவருக்கு நடந்த கொடுமை மாதிரி வேற எந்த ஊர்லயும் நடக்கல.”

“உங்களுக்கு யார் சொன்னது?”

“சட்டாம்பட்டிக்காரங்க.”

“அடுத்தசாதி ஊர்ப்பயலுவ அப்படியா சொன்னாங்க? அவங்களுக்கு நாளும் கிழமையும் குறிக்கணும் போலிருக்கு.”

“அப்படியெல்லாம் செய்திடாதிங்க... போகட்டும். இவரோட பேக்ரவுண்ட... அதான், பின்னணியை சொல்றீங்களா? நீங்க சொல்றது இந்த ஊரே சொல்றது மாதிரி.”

“என்னை என்ன பேக்ராண்டு... இல்ல கேணையன்னு நினைச்சுங்களா? இந்த பெத்தட்டிப் பயலுககிட்டதான்,