பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

சமுத்திரக் கதைகள்


மேட்டிற்கு அருகே மண்ணெண்ணய் விளக்குகளோடு வில் வண்டியில் தனித்து ஏறப்போன ஆறுமுகப் பெருமாள், அதே ஆள் பலத்துடனும், அடிமை இசக்கி மாடத்தியுடனும் அங்கே ஓடிவந்து விட்டார்.

இசக்கிமாடத்தியின் கணவன் புலைமாடனுக்கு ஆவேசம் அடங்க வில்லையானாலும், குறைந்தது, அவனைத் தொடக்கூடாது என்பதற்காகவும், தொடப்பயந்தும், பாருக்குட்டியை மீட்காமலும் என்னச் செய்வது என்று புரியாமலும் கண்களை வெறுமனே திறந்து வைத்துக் கொண்டிருந்த கூட்டத்தின் மத்தியில் அவன் பாருக்குட்டியை விடுவித்தான். வாய்மொழியும், உடல் மொழியும் அற்றுப்போய் எலும்பு மரங்களைக் கொண்ட மனிதக் குன்றாய் சுயமிழந்து நின்றான்.

அம்மாயி, தறவாட்டுப் பெண்களின் ஒலக் குரல்களையும் மீறி, பாருக்குட்டியைப் பார்த்து போலி வருத்தத்தோடு அழுகை அழுகையாய் கேவிக்கேவி பேசுகிறாள்.

“இது புலப்பேடி மாதமுன்னு உனக்குத் தெரியாதா? இந்தக் காலத்து ராத்திரியில, ஆண்துணை இல்லாம வீட்டுக்கு வெளியே வரும் நம்ம சாதிப்பெண்ண திண்டப்படாத சாதிக்காரன் அவள்மேல் ஒரு கல்லை வீட்டெறிஞ்சாலும் போதும், இல்லன்னா ‘கண்டேன் அம்மையை என்று கத்தினாலும் போதும். அவனுக்கு அவள் அடிமையாகணும் என்கிற சாஸ்திரம் உனக்கு தெரியாதா? கடைசில நம்ம வீட்டு அடிமைக்கே அடிமையாயிட்டியே. இனிமே இந்த வீட்ல நீ இருக்க முடியாதே... எந்த நேரத்துல நாமெல்லாம் அடிமையா பொறப்போமுன்னு சாபமிட்டியோ அது உனக்கே பலிச்சுட்டதே.... குருவாயூரப்பா.... குமாரபுரம் முருகப்பா... தானுமாலையன் சாமியே... நாங்க என்ன செய்வோம். ஏது செய்வோம்.”

இதற்குள், ஆறுமுகப் பெருமாள், ஒரு நமுட்டுச் சிரிப்போடு வயிற்றோடு சேர்த்து இடுப்பில் ஒட்டிக்கிடந்த மடிச்சிலைக்குள் கைவிட்டு, சில சக்கரங்களை வெளிப்படுத்தி புலைமாடனின்