பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

சமுத்திரக் கதைகள்

மாடசாமியின் ஊர்வலம்

159


அவர், நீட்டியதைக் கவனிக்காமலே, கடைக்காரர் மக்கள் பத்திரிகையை நீட்டி முழுக்கிப் படித்துக் கொண்டிருந்தார் மாடசாமி “அண்ணாச்சி பத்து பாக்கெட் போதுமா” என்ா: கேட்டார்.

பதிலில்லை.

‘உங்களைத்தான் அண்ணாச்சி. எத்தனை பாக்கெட் வேணும்

கடைக்காரர், இந்த லோகத்தில் இல்லை. பொறுமை இழந்த மாடசாமி, கடைக்காரரின் தொடையைத் தட்டிக் கொண்டே சொல்லுங்க அண்ணாச்சி நேரமாவுது என்று உரக்கக் கூவியதால், அவருக்கு வாய் வலித்ததுதான் மிச்சம், அந்த ஆசாமி, வாயில் உமிழ்நீர் அருவியாய்க் கொட்ட, பத்திரிகையில் இருந்து வைத்த கண் வாங்கவில்லை. அப்படி என்ன அதிசயமாய் எழுதியிருக்கும்’ என்று ஒரு அட்வஞ்சர் மனோபாவத்தில், மாடசாமி தலையை நீட்டினார்.

மாடசாமியின் வாழ்க்கையிலேயே ஒரு மடத்தனமான அல்லது மகத்தான திருப்புமுனை, அப்படி தலையைத் திருப்புகையில் ஏற்பட்டது, மாடசாமிக்கே தெரியாது.

“நாளைக்கு குதிரைப் பந்தயம் துவங்குகிறது.”

இப்படிப் போட்டவுடனே, அது மக்கள் பத்திரிகைக்குரிய இலக்கணமாகி விடுமா? ஆகாது; ஆகையால், ஒரு குதிரைகசின் படமும், அதில் ஜாக்கி சவாரி செய்யும் நளினமும், அதே பத்திரிகையில் பிரசுரமாகி இருந்தது. மாடசாமி, கடலைப் பாக்கெட்டை மறந்தார்: சைக்கிளை மறந்தார். ஏன்? கடைக்காரர் பத்திரிகை படிக்கிறார் என்பதையே மறந்து, பத்திரிகைக்குள் தலையை அதிகமாக நீட்டிக் கொண்டே முண்டியடித்தார். படித்துக் கொண்டிருக்கும் தன் கண்களுக்கு எதிரே பூதாகரமான பொருள் ஒன்று தலைவிரித்துத் தாண்டவமாடுவதை காணச் சகிக்காத கடைக்காரர், எரிச்சலோடு, “அறிவு கெட்ட மடையன்... இப்படியாத் தலையை நீட்டுறது. ஒசியில படிக்கிறதுக்கும் ஒரு மட்டுமரியாத வேண்ட்ாமா” என்று சொல்லிக் கொண்டே