பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

சமுத்திரக் கதைகள்


விடுகிறான். அந்தப் பெண் ஒலமிட சக்தியற்று முடங்கிக் கிடக்கிறாள். நடக்கப்போவதை எதிர்பார்த்து, கண்களை, கைகளால் மூடிக் கொள்கிறாள்.

யந்திரமயமாய் நின்ற ராசம்மா மனிதமயமாகிறாள். கிழே குனிகிறாள். அவளுக்கென்றே தரையில் ஒரு கூர்மையான பாறாங்கல் காத்துக்கிடக்கிறது. அதைத் துக்கிக் கொண்டு குப்பாய துச்சாதனனை நோக்கி ஏலேய்.. “என்று கத்தியபடியே, ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து, அவனை அந்தப் பெண்ணின் காலடிக்கு பின்புறமாய், தலையில் ரத்தம் சொட்டச் சொட்ட வீழ்த்துகிறாள். தோளில் சாய்ந்த குப்பாயப் பெண்ணை தூக்கி நிறுத்தி அணைத்தபடியே அடிதடிச் சந்தையை நோக்கி அடிமேல் அடிபோட்டு நடக்கிறாள். அந்தப் பெண்ணை நடத்தி நடத்தி -

அங்கே நடைபெற்ற எளிய பெண்களின் தோள்சிலை உரிமைப் போரில், முகம்தெரியா மனுசியாய் ராசம்மா சங்கமிக்கிறாள்.

பி.கு : அந்தக் காலத்தில், திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களின் மேலாடை தோள்சிலை என்று அழைக்கப்பட்டது.

ஆனந்த விகடன்,