பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மூலம்

அபலையர் காப்பகம் என்ற பெயர்ப் பலகை, அந்தப் பெயருக்கு உரியவர்களைப் போலவே, எளிமையாகத் தோற்றம் காட்டியது. ஆனாலும், எளிமையும் ஒரு அழகு என்பதை விட, எளிமைதான் எழில் என்பது போல் - அதே சமயம் 'தான்' என்ற கர்வம் இன்றி காட்சியளித்தது. இந்தப் பலகையை தாங்கும் இரும்பு கம்பிகள், லி ங்கங்கள் போலவும் அவை பொருத்தப்பட்ட மதில்சுவர்கள் ஆவுடையாகவும் தோற்றம் காட்டின. இவற்றிக்கு இடையே வாய் மூடிக் கிடக்கும் இரும்புக் கிராதி. கதவுகள். இப்போது திருவாய் மலர்ந்தருளின. கண்ணபிரான், திருவாய் திறந்து, அதற்குள் அடங்கிய அண்ட சராசரங்களை, யசோதைக்கு காட்டியது போல, உள்ளே மண்டிக் கிடக்கும், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் ஆகியவற்றை காட்டியது. கூடவே, கண்ணபிரான், காட்டியிருக்காத தொலைபேசிக் கண்ணாடி அறை, அச்சுக் கூடம், நகலகம் ஆகியவற்றை வீடுபடுத்திய சின்னச் சின்ன கட்டிடங்களையும், தையல் கூடம், செயற்கை வைரத்திற்கு பட்டை திட்டும் தொழிலகம், தச்சுப் பட்டறை, பள்ளிக் கூடங்கள், சொற்பொழிவு மண்டபம், அப்போதுதான் கட்டப்பட்ட திறந்த வெளிக் கலையரங்கம் முதலி யவற்றையும், பனித்துளி பனை போல் காட்டி கொண்டிருந்தது.

தாழ் திறந்த அந்த வாசல் வழியாக, குட்டாம் பட்டியர்கள் உரிமையோடு உள்ளே போய்க் கொண்டிருந்தார்கள். வெளி வாசலில் இருப்பக்கமும் நின்று கொண்டிருந்த காப்பகத் தலைவர் லூதர்மேரியும், இளங்கோவும், வந்தவர்களுக்கு, மனமார தலை தாழ்த்தி, வாயாரச் சிரித்து வரவேற்றார்கள். கூட்டத்தினரும் இளங்கோவை 'வணக்கங்கையா’. என்றும், மேரியை 'வணக்கங்கம்மா’ என்றும் சொல்லிக் கொண்டே உள்ளே போனார்கள். சாதாரண வேட்டி சட்டையுடன், கால நேரம் என்பது தன்னைத் தான் பின்பற்ற வேண்டும் என்பது போல்