பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூலம்

59


‘எங்கள வரச் சொல்லி இப்படி மட்டம் தட்டபடாது’

‘நீ சும்மா இரு மச்சான்... அம்மாம்மா... நீங்க போனத சாக்கா வச்சி, இந்த தனசேகரன் எங்கள தடுக்காரு...’

லூர்துமேரி, கருணையையும், கண்டிப்பையும் வார்த்தைகளாக்கி உதிர்த்தாள்.

இது உங்க காப்பகம்... உங்களோட உழைப்பால் உருவான அமைப்பு இது... உங்களை தடுக்க எங்களுக்கே உரிமை கிடையாது. தம்பி தனசேகரா! உங்களுக்கு, தனி ஆவர்த்தனம் செய்யனுமுன்னு ஆச வந்துட்டு. பேசாம ஏதாவது ஒரு ஊருல போய் செய்துட்டுப் போங்க... அதுக்காக எங்க சனங்களை தடுத்து... காப்பகத்துக்கு ஏன் கெட்ட பேர் வாங்கி கொடுக்கிங்க?”

‘சாப்பாடு போதாதுன்னுதான் மேடம்’

‘இப்ப கூட தனி ஆவர்த்தன முயற்சியை நீங்க மறுக்கலியே... சரி போகட்டும்... சாப்பாட்டுக்காக சனங்களா... சனங்களுக்காக சாப்பாடா... பற்றாக்குறை ஏற்பட்டால், தென்காசிக்கு போய் வாங்கிட்டு வந்தா போச்சு... வாங்கம்மா... வாங்கய்யா... நாங்களே உங்கள கூட்டிட்டு போறோம்.’

இதற்குள், அந்த தம்பதியர் நேரில் வந்து வரவேற்பதற்காக சுழல் விளக்கு கார் பக்கம் நின்ற எஸ்.பி., எதையும் காட்டிக் கொள்ளாமல், இளங்கோ.மேரி தம்பதி பக்கம் வந்தார். இளங்கோ, அவரது கையைப் பற்றிக் கொண்டு முன் நடக்க, மேரி பின் நடக்க, கூட்டம் முழுவதும் அவர்கள் பின்னால் நடந்தது. நடந்த விவகாரத்திற்கு காரணமான தனசேகரனை, கண்களால் நிமிட்டிக் கொண்டும், காப்பகத் தம்பதியை, பயமற்ற பக்தியோடு பார்த்துக்கொண்டும், அவர்களுக்கு வாழ்க என்ற முழக்கத்தை முழங்க, வாயைத் திறந்து வைத்துக் கொண்டு பின்னர் அந்த முழக்கங்கள், அவர்களுக்கு பிடிக்காது என்பதை உணர்ந்து, அதே சமயம் திறந்த வாய், பயன்பட வேண்டும் என்பது போல், அக்கம் பக்கம் பேசிக் கொண்டும், சிறிசுகள், இலை மறைவு காய் மறைவாய் சோடி சேர்ந்து கொண்டும், பெரிசுகள், உறவினர்களை தவிர்த்து,