பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VI

இந்த ஒற்றைவரி அணுகுண்டு அந்தத் தம்பதியரை நிரிவாணமாக்கி விடுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக ஆண்மையப் பண்பாடு போர்த்தியுள்ள அடுக்கடுக்கான (அழகழகான) தாம்பத்தியத் துகில்கள் ஒற்றை வரியில் இற்றுவிழுகின்றன - விரசமில்லாத விரசம். சமுத்திரத்தால் மட்டுமே இது சாத்தியம்.

நீருபூத்த நெருப்பின் மற்றொரு பரிமாணம் முதிர்கன்னி, கொஞ்சம் பிரச்சாரத் தொனி தூக்கலாக இருந்தாலும் அறிவியல்பூர்வான அணுகுறை. பொதுவாகவே, தன் படைப்புகளின் கருவோடு தொடர்புடைய அனைத்து அறிவியல் உளவில் நுணுக்கங்களையும் அறிந்து கொண்டு படைக்கும் வழக்கம் உள்ளவர் சமுத்திர்ம் - அது எய்ட்ஸ் - ஆக இருக்கட்டும் அல்லது ஒரினக் கவர்ச்சியாகட்டும். இதனால்தான் முதிர்கன்னி என அழைக்கப்படும் கீதா என்ற விஞ்ஞானியின் கதையை சமூகவியல் நோக்கிலும் (மகள்-தாய்க்காரி உறவு ஃபிராய்டிய உளவாய்வியல் நோக்கிலும் (மகள்-அப்பாக்காரர் உறவு) அணுகத்தக்கதாகக் கட்டமைத்துள்ளார்.

முரண்பாடுகளையும் பலவீனங்களையும் கடந்த மனிதர்கள் இல்லை என்பதை மூலம் முன்வைக்கிறது. சாதாரண மனிதர்களின் இருண்ட பக்கங்களைவிட, வெளிச்சத்திலுள்ள உயர்ந்த மனிதர்களின் இருண்ட பக்கங்கள் மிக மோசமானவையாக உள்ளன. சிலர் இந்த இருண்ட பக்கங்களைக் கடந்து வருகிறார்கள். சிலர் தனக்குள்ளே புதைத்து மறைத்துக் கொள்கிறார்கள். இப்படிப் புதைந்த அழுக்குகள் அப்படியே மக்கிப் போகலாம், அல்லது ஆளுமையில் புரையோடியும் போகலாம். “டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் அம்மையார், அன்னை தெரசா ஆகியோரின் முப்பெரும் உருவமாகத் திகழும் அம்மையாருக்கும், “அவரைப் பேசவிட்டு ரசிக்கும் பெண்ணியச் சிந்தனையாளரான’ கணவருக்கும் பின்னால் ஒடிப்போன கதை. சமூகசேவகர்கள் என்ற பிம்பம் கட்டுடைக்கப்படுகிறது. வாசகராகிய நமது கைகள் திரும்பிப் பாராமல் நடக்கும் அந்தப் பழைய முகக்காரியையும் கோராதிகோரச் சிறுவனையும் தடுத்து நிறுத்த நீளுகின்றன.