பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

சமுத்திரக் கதைகள்


அது என்ன என்னையே ஏகாரம்...நீ இவனோட எட்டு வருசமாதான் குப்பைக்கொட்டறே. நான் முப்பத்திரண்டு வருசமா.. கூட இருந்தவன்.’

‘எனக்கு நாத்தனார் இல்லாத குறையை நல்லாத்தான் போக்குறீங்க.’

தமயந்தி, மூத்தார் பதிலுக்குச் சொன்ன வார்த்தைகள் காதுகளில் ஏற்றியபடியே, தனக்குள்ளேயே தன்னையே ஒரு ஆய்வு பொருளாக்கினாள்... மனைவி, பிற்காலத்தில் வந்தாலும்

ங்கும் கணவனுக்கும் இருக்கும் நெருக்கம் பெத்தவங் நீே உடன் பிறப்புகளுக்கோ இருக்க முடியுமா?

அவளுக்கு, தன்னை ஆய்வு செய்யச் செய்ய, கடைந்ததாக கூறப்பட்ட பாற்கடலில் ஏற்பட்டது போல், துவக்கத்தில் சந்தேகம்... அப்புறம்... பொறாமை... கூடவே... கோபம்... இறுதியில் எல்லா உணர்வுகளையும் மழுங்கடித்தபடி நாணம் வெளிப்பட்டது. மூத்தாரை சிரிப்போடு பார்த்தாள். பிறகு அந்த சிரிப்புக்கான காரணத்தை அவர் கண்டறியாமல் இருப்பதற்கு ‘காபி குடிக்கிறிங்களா? என்றாள். அவரோ அவசரப்படுத்தினார்

‘சரி... ரயிலுக்கு நேரமாயிட்டது. இன்னும் இவனை நீ ரெடியாக்கலையா ?

இவரா ரெடியாகணும்... நான் என்னத்தை ரெடியாக்குறது? இதோ.பாருங்க... சட்டப் பொத்தான்களை எப்படிப் போட்டிருக்கிறாருன்னு’

தமயந்தி, கணவனின் தாறுமாறான சட்டை பித்தான்களை அவன் கழுத்துக்கு இன்னொரு கழுத்துப்போல் தலைநீட்டி அந்த பித்தான்களை கழட்டி மீண்டும் தக்கபடி மாட்டப் போன போது, மூத்தார் அதட்டலாகப் பேசினார்.

“அவனையே பட்டன் மாட்டச் சொல்லேன். இவனை இப்படி பொஸ்ஸஸ்சிவா ஆக்கி ஆக்கியே, உருப்படியில்லாம செய்துட்டே... அவனை செயல்பட விடும்மா."