பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமர மேதை

75


பாட்டுக்கு இருந்ததில் அந்த பெண்களுக்கு ஒரு ஆறுதல். அதே சமயம், அவன் தங்களை அலட்சியப்படுத்துகிறனோ என்ற ஆதங்கம். ஆனாலும் தங்களுக்குள் நடந்த அரட்டைகளில், அவர்கள் இவனை மறந்தார்கள். தத்தம் கணவன்மாரையும் மறந்தார்கள்.

இரவு, இருளாகிவிட்டது.

எந்தப் பகுதியில் ரயில் ஒடிக்கொண்டிருக்கிறது என்பதை அனுமானமாக கூட கூறமுடியாத அடர் இருட்டு. இருபக்கமும் மலையும் மரங்களும் அந்த ரயிலுக்கு முக்காடுகளாயின. தாமோதரன் இருக்கையில் இருந்து துங்கியபடியே கிடந்தான். எந்த நேரத்திலும் அவன் கீழே விழலாம் என்பது மாதிரியான உடலாட்டம். இந்தச் சமயத்தில் அந்த மூவரில் முத்தவள் அவனை சார் சார் என்றாள். ஆசாமி அசையாததால் அவன் இருக்கையின் அருகே கையைத் தட்டினாள். அது தேவையான அளவுக்கு சத்தம் போடாததால், மேலே இடைவெளியாய் உள்ள பலகையை குத்தினாள். அவன் எப்படியோ கண்விழித்தபோது, இவள் கெஞ்சும் குரலில் யாசித்தாள்.

‘சார் நாங்க மூணுபேரும் சிஸ்டர்ஸ். இவள் சிங்கப்பூரில் இருக்கிறாள். இன்னும் கல்யாணம் கூடிவரல. இப்பத்தான்... நல்லா படிச்சபொண்ணுக்கு மாப்பிள்ள கிடைக்கிறது கிடையாதே. அதோட செவ்வாய் தோசம் இருந்தா தேறவே முடியாது. அதனால மங்களுர்ல இறங்கி உடுப்பி கிருணன் கோயில்... தருமஸ்தலா... சுப்பிரமண்யா கடைசிலே முகாம்பீகைன்னு முறையிடபோறோம்.’

‘எனக்கு இதுல நம்பிக்கை கிடையாது

நம்பிக்கை இல்லாட்டியும் எங்களுக்கு உதவக்கூட துன்னு இருக்குதா?

நோ நோ... அப்படி சொல்லலியே’

‘நாங்க விடிய விடிய பேசிட்டு இருப்போம். உங்களுக்கு இடைஞ்சலா இருக்கும். அதனால அப்பர் பெர்த்ல போய் படுத்துக்கங்களேன்.

இது என்னோட பெர்த்தாக்கும்.'