பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமர மேதை

79


கருத்தரங்க அறையில், துறைத்தலைவரின் நீண்ட நெடிய அறிமுகத்திற்குப் பிறகு, டாக்டர் தாமோதரன். மைக்குகள் பொருத்தப்பட்ட மேடையோர போடியத்தின் அருகே வந்தான். அவனது பேண்டுக்குள் இன் செய்யப்பட்ட சட்டை மடிப்புக்கள் இருபக்கமும் வெளிப்பட்டு ஒரு பக்கம் இடுப்பு சதையையும் மறுபக்கம் டவுசர் துணியையும் காட்டிக்கொண்டிருந்தன. விருந்தினர் மாளிகையில் வாய் கொப்பளித்த தண்ணிர், அவன் மெல்லிய தாடியில் புல் மேல் படிந்த பனித்துளிகளால் காட்சி காட்டின. அவனை பார்த்து லேசாய் மனதுக்குள் சிரித்த நிபுணர் கூட்டம், அவன் பேசப்பேச கண்களை மூடி காதுகளை கூர்மையாக்கியது. டாக்டர் தாமோதரனுக்குள் ஒரு புதிய மனிதன் எழுந்தான். கையோடு, விடாப்பிடியாய் கொண்டு வந்த ஒரு பெட்டியை திறந்து, அதில் உள்ள நீண்ட வால்வுகளைக் கொண்ட ஒரு அதிசயப் பூச்சி போல் தோன்றிய கருவியை எடுத்து, அதன் வால்களை மின்சார பிளக்களில் பொருத்திவிட்டு விளக்கினான். இவன் ஒரு கவசம் போலவும். இந்த கவசத்திற்குள் இருப்பவன்தான் உண்மையான தாமோதரன் என்பது போலவும் பேசினான்.

‘இதோ இந்த மெசின் இருக்குதே இதுக்கு எக்ஸ்டர்னல் பல்மினிரி டிவைஸ் என்று பெயர். அதாவது இதய அடைப்புகள ஆப்ரேசன் இல்லாமலே சரிபடுத்தக் கூடிய கருவி. இதை பல ஆண்டு ஆராய்ச்சிக்கு பிறகு கண்டுபிடிச்சேன். இதோ இதுல இருக்குதே முனு கப்புங்க... இதுங்கள இரண்டு பாதங்களிலும் ஒரு முட்டி கால்முனை ஒன்றிலும் பொருத்தணும். பாதத்துலதான் அறுபது சதவீத ரத்தம் இருக்குதுன்னு நிபுணர்களான உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்ல. இந்த கருவியை, ஒரு இதய நோயாளி மேல், பொருத்தினால், இதயம் விரியும் போது, இந்தக் கருவி சுருங்கும். சுருங்கும் போது, இது விரியும். இதனால் இதயத்திற்கு நிறைய ரத்தம் போகும். எல்லா உறுப்புக்களுக்கும் சமச்சீரா ஒடும். இதனால இதயத்துல இருக்கிற அடைப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமா நீங்கும்... அந்த இடங்களுல சின்னஞ் சிறு ரத்தக் குழாய்கள் உருவாகும். அதனால, இதய சிகிச்சைக்கு இப்போதைய அஞ்சோகிராமும், அறுவைச்சிகிச்சையோ