பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 I 6 முகடுகளிலும் அடிவாரங்களிலும்

மாறி விடுகிறார்கள். மாறுவது மட்டுமல்ல, நமக்கே இலக்கிய உபதேசம் செய்ய முற்படுகிறார்கள்.

இயல்பும் யதார்த்தமும்

இவர்கள், அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றி எழுதுபவர்களாக மட்டும் இருந்து விடுவதுதான். வித்தியாசமான படைப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்தப் பிரச்சினையை எடுத்துக் கொள்வதுதான். எந்த சமூகத் தவிப்பைப் பற்றி எழுதுகிறோமோ அந்த சமூகத்தளம் உய்வடைவது வரைக்கும் அதைப்பற்றி எழுதிய எழுத்தாளனும் அங்கீகாரத்திற்கு அலையக் கூடாது என்ற இலக்கியக் கம்பீரம், மக்கள் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டும். புத்தர் உலகில் உள்ள எல்லோருக்கும் ‘நிர்வாணம் கிடைப்பது வரைக்கும் தனக்கு நிர்வாணம்’ வேண்டாம், என்று கிடைத்த நிர்வாணத்தை உதறிவிட்டதாகக் கூறப்படுகிறதே, அப்படித்தான் மக்கள் எழுத்தாளனும் இயங்க வேண்டும்.

நான், பெரும்பாலும் அப்படித்தான் இயங்குவதாக நினைக்கிறேன். உயரத்தின் தாழ்வுகள் தொடர்கதைக்கு நான் எதிர்பார்த்த வரவேற்பு, தினமணிக்கதிர் வாசகப் பரப்பில் கிடைக்கவில்லை. அது வாசகப் பரப்பின் முடத்தனத்தைக் காட்டுவதோடு, இன்றைய படித்ததாகக் கூறப்படும் வர்க்கம், அடித் தள மக்க ளின் பிரச்சி ைன க ள், இலக் கி ய மாக வடிவெடுக்கும்போது, புரியாத வார்த்தைகள்’ என்று பேச்சுத் தமிழை சுட்டிக் காட்டித் தங்களின் புரியாத்தனத்தைக் காட்டிக் கொள்வதுண்டு. ஆனாலும் அந்த தொடர்கதையை, விழலுக்கு நீர் பாய்ச்சியதாக நினைக்கவில்லை. சோற்றுப் பட்டாளத்தைவிட, ‘உயரத்தின் தாழ்வுகளைச் சிறப்பாகக் கருதுகிறேன். அதற்கான அளவுகோல் வைத்து அளந்துதான் சொல்கிறேன். கவிஞர் இளவேனில், இது நன்றாக இருக்கிறது என்றார். என் இலக்கிய வீச்சுக்கு, அவர் சொல்வதே அளவுகோல். அவர் சொல்வது, ஆயிரமாயிரம் தோழர்கள் - அடித்தள மக்களை கரையேற்ற உழைக்கிறார்களே - அவர்கள் சொல்வது மாதிரி. ஆகையால்தான், தோழர் இளவேனில், என்னிடம், உயரத்தின் தாழ்வுகளை எந்த சூழலில் எழுதினேன் என்பதை ஒரு கட்டுரையாகத் தரும்படிக் கேட்டதும், அதை இலக்கியக் கெளரவமாகக் கருதி, எழுதத் தீர்மானித்தேன்.

கல்லாக்கப்பட்ட கல்வராயன் மலைமக்கள்

கல்வராயன் மலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், சேலத்தில் இருந்து, ஐம்பது அறுபது கிலோமீட்டர் தொலைவில்