பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 119

என்னிடம் அவர்களும் தங்களைக் கண்டிருக்கக் கூடும். சரளமாகப் பேசத் துவங்கினார்கள்.

ஜாஹிர்தார் காலத்தில், பல்வேறு வகையான வரிகளைச் செலுத்தியிருக்கிறார்கள். கல்யாணமாகாத பையனுக்கு காவாலி வரி’, ‘அரிவாள் வரி, விதவைப் பெண்களுக்கு வாழா வெட்டி’ வரிகளோடு, ஜாஹிர்தாரர்களுக்கும், சமவெளிக்காரர்களுக்கும் பெண் வரியையும் க்ொடுத்திருக்கிறார்களாம். கூச்சத்தோடுதான் சொன்னார்கள். ஆனாலும், அப்போது, இஷ்டப்பட்ட இடத்தைக் கொத்தி நிலமாக்க முடிந்தது. பொதுவாக, காட்டு மரங்களுக்குத் தீயிட்டு அவற்றின் சாம்பலைக் காட்டில் தூவி உழுது, வரகு பயிரிடுவார்கள். இதற்கு ‘புனக்காடு’ என்று பெயர். இந்த நிலத்தில், இரண்டு போகத்திற்குப் பிறகு பயிரிட முடியாது. அப்படிப் பயிரிட்டால், விளையும் வரகு, போதையைக் கொடுக்குமாம். ஆகையால், நிலம் விட்டு நிலம் தாவும் வழக்கத்தை வைத்திருந்தார்கள். இப்போது, அரசாங்க அதிகாரிகள், புனக்காடு உருவாவதைத் தடுக்கிறார்கள். ஆக, நிலம் இல்லை. காட்டுச் சொத்துக்க ளான முந் தி ரி, தே க்கு முதலியவை, காண்டிராக்டர்களுக்கு போகின்றன. இவர்கள் என்ன செய்வார்கள்? இதுதான் இவர்கள் பிரச்சினை. இது அரசாங்கத்தின் பிரச்சினையாக மாறவில்லை. இதுவே மொத்தப் பிரச்சினை ‘சரி நம்ம தலையெழுத்து’ என்று இவர்கள், அரசிற்கு பிரச்சினையாகாமல் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், ஏற்கனவே சொன்னது போன்ற சூரியக் கறுப்பு.

ஆளில்லாத பிரசவம்

இந்தக் கறுப்பு போக வேண்டுமானால், இவர்களை உஷ்ணப் படுத்த வேண்டியதில்லை. இவர்களின் உஷ்ணத்தைக் குறைக்க வேண்டும். இதற்கான அறிகுறிகள், பல கிராமங்களில் தோன்றத் துவங்கியுள்ளன. ஜாஹிர் காலத்தில் தங்களுக்குள்ளே வாழ்ந்த மூப்பன் போன்ற உள்ளூர் அலுவலர்கள் நடந்து கொண்ட விதத்தை வெறுப்போடு பேசி, உஷ்ணத்தைக் காக்கும் இவர்கள், விரைவில் ஒளி சிந்தத் துவங்குவார்கள். ஆனால், இவர்களுக்குள் ஒரு தலைமை இன்னும் உருவாகவில்லை. உருவாகக்கூடிய பிரசவம், உள்ளது. பிரசவம் என்றதும் இன்னொன்று நினைவுக்கு வருகிறது. சமீபகாலம்வரை, இந்த மக்கள் பிரசவநிலையில் உள்ள பெண்களை, தனியாக ஒரு குடிலில் ஆளுதவி இல்லாமல் விட்டு விடுவார்களாம். அவள் பெற்று வந்தால் உண்டு. இல்லையானால், குடும்ப நலத்திட்டம், வாலெக்டமி டுபெக்டமி இல்லாமல் செயல்படுவதாக அர்த்தம்.