பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 40 வேரில் பழுத்த பலா

அதற்கென்ற உள்ள சில சகாக்கள் சுட்டிக்காட்டும்போது அவர் கண்ணுக்குத் தெரிந்த இந்தச் சிங்கம் அசிங்கமாகிவிடும். ஆனால், வெளியே வந்தாலோ நாங்கள் தோழர்கள். ஒவ்வொரு தி ட்டுக்கும் ஒரு பெக் சோமபாணம் கொடுப்பார். பிராமணராக இரு ந்தாலும், தந்தை பெரியாரிடம் அளவற்ற பற்று கொண்டவர். இந்த சந்தர்ப்பத்தில் என் புது மனைவி ஒன்பது மாதத்தோடு ஊருக்குப் போய்விட்டார். எனக்கு சமையலை சொல்லிக் கொடுத்தார். செய்ய முடியவில்லை. எப்படியோ கண்டதைத் தின்று வேலை பார்த்தபோது, துப்பினால் ரத்த ரத்தமாக வந்தது. நான் பயந்து போனேன். மருத்துவமனைக்குப் போனால் எனக்கு டி.பி. வந்திருப்பதாகத் தெரிவித்து மருந்தும் கொடுத்தார்கள். இதைக் காரணம் காட்டி என் மேல் அதிகாரியிடம் வேறு துறைக்கு மாற்றம் கேட்டேன். அதற்குள் என் வேலையையும் விசுவாசத்தையும் புரிந்துகொண்ட என்குரு இராமநாதன், எளிதாக ஷிப்ட் கொடுக்கிறோம். இங்கேயே இரு என்றார். என்னுடைய உடல் இளைக் காததை பார்த்துவிட்டு, நான் வேண்டுமென்றே பொய் சொல்லுவதாக மேலதிகாரிகளுக்கு ஒரு அனுமானம்.

என்றாலும், அமைச்சரவை ஆணையிட்டு, புதுடெல்லியில் உள்ள பத்திரிகைத் தகவல் அலுவலகத்தில் உதவித் தகவல் அதிகாரியாக மாற்றினார்கள். ஆனால், வானொலி அதிகாரிகள் என்னை விடுவித்த மறுத்தார்கள். இது தெரிந்ததும் என்னைப் போல் மாறுதலாகி விடுவிக்கப்படாமல் இருக்கும் அனைவரையும் ஒன்று திரட் டி , ‘ உதவி செய்தி ஆசிரியர்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிர்ப்பான சங்கம்’ (Society for prevention of cruelties on Assistant News Editors) என்று ஒன்றைத் துவக்கினோம். இதைக் கேள்விப் பட்ட அதிகாரிகள் உடனடியாக என்னை விடுவித்தார்கள். என்.குரு அல்பம். அல்பம்...’ என்றார்.

பப்பாளி தர்பார்

நான் டி.பி.க்காக ஊசி போட்டும், ரத்தம் கொட்டுவது நிற்கவில்லை. பயந்துபோய் சென்னைக்கு விடுப்பில் வந்தேன். அப்போது என்னுடைய ஆன்மீகக் குருவான ரங்கசாமி செட்டியார் ரத் தம் கொட்டுவதற்கான கார ண த்தை கண் டு பிடித்தார். மனைவி இல் லாத இரண்டு மாத இடைவெளியில் தினமும் பப்பாளிப் புழங்களையே ஆகாரமாக உண்டேன். அடே பாவி. அபார்சனுக்கு உரிய பழத்தை சாப்பிட்டிருக்கியே. உனக்கு அறிவு இருக்கா? என்று கடிந்து