பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 1 49

இசைப் பாடல்களையும் அருளியவர். மூன்றாவமர், 1711-ம் ஆண்டு தில்லையாடியில் உருவாகி, 258 இசைப்பகுதிகளைக் கொண்ட ராம நாடகத்தை எழுதியும், அவற்றில் நாற்பது ராகங்களைப் பயன்படுத்தியவருமான அருணாசலக் கவிராயர். ஆனால், இன்றோ, இந்தச் சொந்த மொழி இசை மேதைகளை “வந்த மொழி” மேதைகள் துரத்திவிட்டனர். அவர்கள் துரத்தினார்களோ, இல்லையோ, அவர்களது பேரால், தமிழர்களின் இசை மேதைகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறார்கள். இவ்வளவுக்கும் செட்டிநாட்டரசர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரும், பாரதத்தின் முதலாவது நிதி அமைச்சர் திரு. ஆர்.கே. சண்முகம் செட் டி யாரு ம் , டி. ஏ. நாராயணசாமிப் பிள்ளையும் - எல்லாவற்றிற்கும் மேலாக தந்தை பெரியாரும் தமிழிசைக்கு உந்து சக்தியாக இருந்தவர்கள். இந்தத் தமிழிசை இயக்கம் வந்ததே ஒரு தனிக்கதை.

திருவையாறிலுள்ள தியாகராச சுவாமிகளின் நினைவாக அமைக்கப்பட்ட சபாவிற்கு 144 வயதாகிறது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் விழாவில் அந்த சுவாமிகளின் தெலுங்கு கீர்த்தனைகள் இசைக்கப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக பேர் பெற்ற அனைத்து வித்வான்களும் இதில் பாடுவார்கள்.

சங்கீதக் குண்டர்கள் 1931-ம் ஆண்டுவாக்கில் தமிழிசை மேதை பேராசான் தண்டபாணி தேசிகர் அங்கு பாடுவதற்காக அழைக்கப்பட்டார். அவரும், தியாகராஜ சுவாமிகளின் இரண்டு கீர்த்தனைகளைப் பாடிவிட்டு, மூன்றாவதாக ஒரு தமிழ் பக்திப் பாடலை பாட முற்பட்டிருக்கிறார். அவ்வளவுதான், அங்குள்ள சங்கீதக் குண்டர்கள் அவரைப் பாட விடவில்லை. கூச்சலிட்டுக் குழப்பமிட்டு கீழே இறக்கி விட்டார்கள்.

இதைக் கண்ட கொதிப்பில்தான் அண்ணாமலைச் செட்டியாரும், ஆர்.கே. சண்முகம் செட்டியாரும், ரத்னசபாபதி முதலியார் போன்றவர்களும் தமிழிசைக்கு மீண்டும் புத்துயிர் அளித்தார்கள். அப்படியும் தமிழிசைக்கு மேடை கொடுத்த மன்றத்தில், தமிழ்ப் டாடகர்கள் பாடுவதற்குத் தயங்கினார்கள். இதை மனதில் வைத்து, 4-1-44ல் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்:

“எந்தப் பாடகர்களும் வர மாட்டோம் என்று சொல்லி இருந்தாலும், கடைசி முடிவில், ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களும் நானும் மேடையிலேறிப் பாடிவிடுவது எனவும்கூட தீர்மானித்தோம்.”