பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தாழ்த்தப்பட்ட தமிழிசை

இப்படி நமது முன்னோர்கள் முன் வந்தும், தமிழ்ப் பாடகர்கள் முன்வராததற்குத் தாழ்வு மனப்பான்மை காரணமாக இருக்க முடியாது. பின் என்ன காரணம்?

தமிழிசையின் செட்டிநாட்டரசர்

தமிழிசைக்காக, செட்டிநாட்டரசர் ஒரு இயக்கம் தோற்றுவித்தாலும், அதிலும் இப்போது. கர்நாடக வாடை வந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆரம்பத்தில் வாத்தியங்களில் உருவான கர்நாடக வாசனை, இப்போது பாடல்களிலும் மெல்ல மெல்ல ஊடுருவி, தமிழ்ப் பாடல்களை நோகடித்து வருவதாகக் கூறப்படுகிறது. பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் இதை மனதில் வைத்துத்தானோ என்னவோ, “தமிழ்ப் பண்ணிசை ஏட்டில் இருக்கிறது. இலக்கணத்தில் உள்ளது. ஆனால் நாட்டில் நடமாடவில்லை. நடமாட நம் விடவில்லை” என்றார். அதாவது. பழியை பிறமொழிக் கீர்த்தனைகள் மீது போட்டு விட்டு, நாம் ஒதுங்கக்கூடாது என்கிறார்.

சை மறியல் ல்ல. இ றியல் அ

இப்படிச் சொல்வதால், நான் வடமொழிக்கோ, சங்கீத மும்மூர்த்திகளுக்கோ எதிராய் இசை மறியல் செய்வதாக பொருள் கொள்ளலாகாது. பாரதி குறிப்பிட்டது போல் தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகள் சுந்தரத் தெலுங்கில் உதயமானது, அவர் தப்பல்ல. அவரது கீர்த்தனைகள் ஆங்காங்கு பாடுவதிலும் தப்பில்லை. ஆனால், அவையே எல்லாம் என்று ஆகி, தமிழிசை அது தோன்றிய மண்ணிலேயே புதைக்கப்பவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கோவிலின் கருவறைக்கு வேளியே அடிமைத்தனமாக இருக்கும் ஒதுவார் தமிழ்போல், தமிழிசையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த சங்கீத மேட்டுக் குடித்தனத்தை, இளையராஜா போன்ற வர்கள் , தமிழ்ப் பண்ணால் முறியடித்திருக்கலாம். ஆனால், அவர்கள் ஏனோ அதில் முழுக்கவனம் செலுத்தவில்லை. இசைக்கருவிகளின் நாதம்தான் தமிழைப் பின்புறம் தள்ளுகிறது.

பண்ணமைந்த பாடல்கள்

நமது தேவாரப் பாடல்கள் அனைத்துமே பண் அமைத்துப் பாடக்கூடிய வகையில் இயற்றப்பட்டவை. குறிப்பாக, திருஞானசம்பந்த சுவாமிகள், பாடல்களையும் பண்களையும் பின்னிப் பிணைத்தவர். ஆழ்வார் பாடல்கள் அத்தனையும் இசைத் தேனாய் மிளிர்பவை. ஆனால், இவற்றை எந்தக் கச்சேரிகளிலும் அதிகமாகக் கேட்க முடியாது.