பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 56 உலகம்மை-என் அம்மை

தன் மகள் சரோஜாவாகக் காட்டி பையனை மயங்க வைத்து, இறுதியில் மணமேடையில் தன் மகளை உட்காரச் செய்வதற்காக, ஆள் மாறாட்டம் செய்கிறார். உலகம்மை, இந்த தில்லுமுல்லில், அவளை அறியாமலே பயன்படுத்தப்படுகிறாள். விவரம் தெரிந்ததும், நேராக சட்டாம்பட்டிக்குப் போய், லோகுவிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு வந்து விடுகிறாள்.

பிராந்தனை ஏவி.

மாரிமுத்து நாடாரின் ஆதிக்க பலமும், அகரத்தனமும், தெரிந்திருந்தாலும், தன் உடம்பைக் காட்டி, ஒரு திருமணம் நடப்பதையோ, பிறகு மணமக்கள் இருவரும் கஷ்டப்படுவதையோ விரும்பாத உலகம்மை, நியாயத்தின் பொருட்டு, சிலுவை ஏந்திக் கொள்ளத் தயாராகிறாள்!

தந்தை மாயாண்டி, அவள் மானபங்கப் படுத்தப்படலாம் என்று சொன்னபோது, நான் புலிக்குப் பொறந்தவ. ஒம்மோட மவள். எந்தப் பய வேணுமுன்னாலுங்ம வாலாட்டிப் பார்க்கட்டும். அவன் தலய வெட்டி ஒம்ம காலுல வைக்காட்டி, நான் உலகம்மல்ல என்று சூளுரைக்கிறாள்.

உல்கம்மை, லோகுவிடம் தெரிவித்த உண்மை ஊருக்குத் தெரிந்து விடுகிற்து. மாரிமுத்து நாடாரின் வயலில் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருக்கும் அவள், மாரிமுத்துவின் சொந்தக்காரன் ‘பிராந்தனால் கண்டபடி திட்டப்பட்டு வெளியேற்றப்படுகிறாள். சக கூலிப்பெண்கள் உதவிக்கு வந்தாலும், உலகம்மை அதை நாசூக்காக நிராகரித்து விட்டு, சட்டாம்பட்டியில் வயல் வேலைக்குப் போகத் தீர்மானிக்கிறாள்.

ஒரு கோட்டுக்கு உள்ளே...

விவகாரம் இத்துடன் நிற்கவில்லை. அவள் தந்தை மாயாண்டி, மாரிமுத்து நாடாரிடம் என்றோ வாங்கிய கடனுக்காக, ஒரு கோட்டுக்குள் நிறுத்தப்படுகிறார். இன்னும் சில கிராமங்களில் நடந்து வரும் சம்பிரதாயப்படி, வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காத ஏழை எளியவர்கள், வட்டமாகப் போடப்பட்ட கோட்டுக்குள் வைக்கப்படுவார்கள். அதை அவர்கள் தாண்டக் கூடாது. தாண்ட முடியாது. உலகம்மை, சட்டாம்பட்டி வயலில் இருந்து நேராக தந்தை சிறை இருக்கும் கோடு போட்ட இடத்திற்கு வருகிறாள்.

அவர் தண்ணிர் தண்ணிர் என்று கதறுகிறார். அவரை மீட்கப்போகும் மகளை, மாரிமுத்து கோஷ்டி அச்சுறுத்துகிறது. அக்கம் பக்கம் நிற்பவர்கள், கண்டுக்கவில்லை.