பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 1 63

பூச்சி எனக்கு வழங்கியிருக்கிறது!

பட்டாம்பூச்சியின் படத்தை மார்பில் பச்சை குத்தி, அதனாலேயே அந்தப் பெயரைப் பெற்ற இருபத்தைந்து வயது பிரெஞ்சு இளைஞன் ஒருவன் செய்யாத கொலைக்காக தண்டனை பெற்று, பிரெஞ்சு கயானாவில், கொடியதும், கொடுரமானதுமான தீவாந்திர சிறைக்கு கொண்டு செல்லப் பட்டதையும், அங்கிருந்தும் அதைப்போன்ற பிற சிறைகளில் இருந்தும் அவன் தப்பிக்க முயற்சிகள் மேற்கொள்வதையும் அந்த முயற்சிகள் முறியடிக்கப்படுவதையும், இறுதியில் அவன் முயற்சி வெற்றி பெற்று சுதந்திர மனிதனாக மாறுவதையும் காட்டும் விடுதலைக் காவியம் இது.

செய்யாத குற்றத்திற்காக தண்டனை பெறுவதற்கு காரணமான நீதிபதி, ஜூரர்கள், அரசாங்க நீதிபதி போன்ற சுவையில்லாத பேர்வழிகளை பழிவாங்கியே தீர்வது என்று தீர்மானத்துடன் அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறுகோடியில் உள்ள தீவாந்திர சிறைக்கு செல்கிறான்.

புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்களை கட்டை விரல் பருமனுள்ள ஒரு குழாயில் அடைத்து, அதை மறைப்பதற்காக அவன் ஆசன வாயின் வழியாக பெருங் குடலுக்குள் தள்ளிவிடும்போதே உற்சாகம், ‘திகில் ஆகிறது. சிறைச்சாலையில் பயங்கரமான மரணக்கூச்சல்கள்.... சித்திரவதைகள். ஆண்டுக்கு எண்பது சதவீதம் கைதிகள் இறந்து விடும் கொடுமை.... தனிமைச்சிறை.... தலைக்கு மேலே தொங்கும் விளக்கே கண்ணை வலிக்க வைக்கும் நிலமை, தேகா என்ற சகக் கைதியின் உதவியால், சிறையை வெடிவைத்து தகர்க்க முயற்சி செய்து பிடிபட்டுவிடுகிறான்.

இதனால், பயங்கரமான ஒரு கொட்ட டிக் குள் மாட்டப்படுகிறான். எதிரே உள்ள கடல் அலைகள் அவன் இடுப்பு வரைக்கும் வந்துபோகும். இப்படிப்பட்ட சிறைகளை எல்லாம் தப்பி, கட்டுமரம் மூலம் தப்பிக்க பார்க்கிறான்.

பதிமூன்று வருடங்களாக, கொட்டடிகளில் இருந்து தப்பிக்க பல்வேறு முயற்சிகள் செய்து, 1945-ஆம் வருடம் அக்டோபர் 15-ந் தேதி தப்பித்த பட்டாம்பூச்சியைப் படிக்கும் எவருக்கும் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளும் உறுதி கிடைக்கும்.

ஆரம்பத்தில், பிரெஞ்சு மொழியில், பாப்பிலியான் என்ற தலைப்பில் வெளியான இந்தப் படைப்பு பின்னர் பல மொழிகளிலும் வெளியாகி திரைப்படங்களாகவும் வெளிப்பட்டது.