பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 183

தமிழ் செய்திப் பிரிவில் துணை ஆசிரியராக இடறி விழுந்தேன் அப்போது செய்திகளையும் வாசித்துக் கொண்டு இருந்தேன் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன பெருந்தலைவர் காமராசர் விருதுநகரில் தோற்றுவிட்டார் என்ற ஒரு செய்தி. எனக்கு, அழுகையும், ஆத்திரமுமாக வந்தது. மத்தியானம் செய்தி படிப்பதற்காக ஸ்டுடியோவிற்குள் சென்ற நான், அப்போதுதான் கிடைத்த பெருந்தலைவரின் தோல்விச் செய்தியைப் படிக்கும்போது அழுது விட்டேன். இதைத் தமிழகம் முழுவதுமே கேட்டது. இப்போதுகூட என்னைப் பார்க்கும் பெரியவர்கள் நான் அப்படி அழுததை சுட்டிக் காட்டுகிறார்கள்.

மறையா உருவம்

பெரியவர் தோற்ற ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு நான் நாடாளுமன்ற வளாகத்தில் அவரை சந்தித்தேன். உடம்பு பழுத்துப் போய் இருந்தது. ஆனாலும், அந்தக் கண்களிலே ஒரு பிரகாசம். நான் என்னை அறிமுகம் செய்து கொள்ளப் போனபோது - உன்னை எனக்குத் தெரியாதா சமுத்திரம்? நான் தோத்தத அழுதுகிட்டே படிச்சியே, கிறுக்கா... அப்படியா படிப்பது? என்றார். சிறிது நேரம் என்னையே பார்த்துவிட்டு, செய்தி படிக்கும்போது நம்மோட உணர்ச்சிய காட்டக்கூடாது தெரியுமா? என்று நான் ஐநூறு பக்கங்களில் படித்ததை ஒரே வரியில் சொன்னார். மீண்டும் என்னை உற்றுப் பார்த்துவிட்டு, போகட்டும். இதுக்காக ஒனக்கு மெமோ கொடுத்தாங்களா?’ என்று வினவினார். இல்லீங்கய்யா. திட்டுனாங்க. என்றேன்.

நான் பெருந்தலைவரை வைத்த கண் வைத்தபடியே பார்த்தேன். அப்போது என் கண் வழியாக மனதுக்குள் பதிந்த அவரது உருவம் இன்னும் அப்படியே நிற்கிறது.

மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட இலஞ்ச லாவண்யமற்ற அந்த மாபெரும் மனிதரைப் பற்றி, மக்கள் இப்போது முழுமையாக உணருவதைக் கேட்கும்போது, ‘கற்பூரமே... உன் வாசனையை இப்போது அனைவரும் உணர ஆரம்பித்து விட்டனர் என்று சொல்லிக் கொள்கிறேன். அவர் பெருந்தலைவர் என்பதை அப்போது மட்டுமல்ல இப்போதும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்.

காங்கிரஸ் பேச்சாளனாய்...

1962ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காஞ்சீபுரம் லோக்கல் பேச்சாளர்களில் நான்தான்