பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 11

கல்லூரிக் காலத்தில் கவிதை எழுதுபவனாகவும் இருந்தது, அப்போது என்னுள்ளே கும்பகர்ணனாய் முடங்கிக் கிடந்த கலைத்தன்மை துகில் களைந்து எழுதுவதுபோல் இருந்தது. சிறுகதை ஆசிரியனாக மாறவேண்டும் என்பதைவிட நண்பரின் சவாலுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது.

அன்று இரவே காகிதத்தை எடுத்துக் கொண்டேன். அந்த சமயத்தில் எனது சொந்த கிராமத்தில் நடந்த, நடக்கும் நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்தேன். பெரும்பாலான ஏழைஎளியயவர்கள். எங்கேயோ இருக்கின்ற தலைவர்களுக்கு உயிரைக் கொடுக்கவும் தயார் என்பதைக் காட்ட, தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் அவல நிலையை எண்ணிப் பார்த்தேன். கோவில் திருவிழாக்களிலும், கல்யாண காரியங்களிலும் கட்சிஅரசியல் புகுந்து, கிராம மக்கள் அடித்துக் கொள்வதை கண்ணால் கண்டவன் நான். மக்களை ஒன்று திரட்டி ஒருமைப்படுத்துவதற்காக எழுந்த திருவிழாக்களும், கல்யாணச் சடங்குகளும் கட்சி அரசியலின் பீடங்களாகிப் போனதை நினைத்து, கதை எழுதப் போவதை மறந்து, அந்தக் காட்சிகளிலேயே நினைத்தபடி இருந்தேன். அரைமணி நேர சிந்தனைக்குப்பின் நண்பரின் சவாலும் கதை எழுதுவதற்கே காகிதத்தை வைத்திருக்கிறேன் என்ற எண்ணமும் என்னுள் எழுந்தது. உடனடியாக எழுதினேன். மடைதிறந்த வெள்ளம்போல் வார்த்தைகள் வரிகளாயின. கதை இதுதான்.

குட்டாம்பட்டி என்ற சிறு கிராமம். அங்கே சண்முகம் என்ற வாலிபன் கல்லூரி வரைக்கும் கால் வைத்தவன். உள்ளூரில் ஆசிரியையாக வேலைபார்க்கும் அமுதா என்ற பெண்ணை ந்ேசிக்கிறான். ஒரிருதடவை சந்திப்புக்கள் கூட நடக்கின்றன. இருவருமே சொந்தக்காரர்கள். இந்த இரு இளம் உள்ளங்களையும் இணைத்துவைக்க பெற்றோர்கள் தீர்மானித்து விடுகிறார்கள்.

பெண் வீட்டில் நிச்சய தாம்பூல விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வாழைக்குலை, வெத்திலை பாக்கு எல்லாம் வாங்கியாகி விட்டது. ரொக்கம், நகைநட்டு வகையறாக்கள் எல்லாம் முடிவாகி விட்டன. இதில் எந்த தகராறும் எழவில்லை. கல்யாணத் தேதியை நிச்சயிக்க வேண்டியதுதான் பாக்கி. எல்லோரும் நல்ல காரியம் ஒன்றிற்கு உடன்பட்ட திருப்தியோடு புன்னகைக்கின்றனர்.

திடீரென்று மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த ஒரு பி.யு.ஸி. பெயிலன் கல்யாண விழாவிற்கு நல்லார் கட்சித் தலைவர்