பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 13

இந்தக் கதையை நகைச்சுவையாக பலரும் ரசித்தபோது அப்போது டில்லி யில் இந்தியன் எக்ஸ் பிரஸ் மூத்த செய்தியாளரான திரு. சீனிவாசன் அவர்கள் இந்தக் கதையில் ஒரு G ‘வைத்திருக்கிறீர்கள் என்று வாஞ்சையோடு சொன்னார். அன்றைய பொடிதான் எனது பல படைப்புகளில் வேட்டுகளாக வெடிக்கின்றன.

இந்தச் சிறுகதை வெளியானதும் பல சிறுகதைகளை எழுதி பல பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். அத்தனையும் பிரசுரமாயின. இப்போதும் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், “அங்கே கல்யாணம் - இங்கே கலாட்டா” என்ற சிறுகதையை என்னால் மறக்க இயலாது. காரணம், அது முதல் கதை என்பதால் அல்ல. அதில் நான் வைத்திருந்த சில நிலைகலன்களைத்தான் இப்போது என் படைப்புகளில் பயன்படுத்துகிறேன். அந்த சிறுகதையில் வந்த கிராமத்தின் பெயர் குட்டாம்பட்டி, இந்த குட்டாம்பட்டியையே, பழைமைப் பிடிப்பும், புதுமை நுழைவும் கொண்ட இன்றைய சராசரி கிராமமாக எடுத்துக் கொண்டு நாவல்களிலும் இதே ஊரையே குறிப்பிட்டு வருகிறேன். இதுபோல் நல்லது நினைத்து அதைச் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ள அய்யாசாமி தாத்தாவையும், பல சிறுகதைகளிலும் நாவல்களிலும் கொண்டு வந்திருக்கிறேன். மொத்தத்தில் இந்தக் கதையில் வந்த கிராமமும், கதா பாத்திரங்களும் சமூகப் பொருளாதார தாக்கத்தில் எப்படி மாறிவருகின்றனர் என்று காட்டுவது என் படைப்பிலக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

அடுத்து இந்த சிறுகதையில், ஒரளவு நஹற்ண்ழ்ங் கொண்டு வந்தேன். “சொந்தபந்தம் இல்லாத தலைவர்கள் கல்யாண வீட்ல சந்தித்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுறாங்க. நீங்க என்னடான்னா சொந்தக்காரர்களா இருந்தும் கட்சிபிரிந்து கருமாந்திரத்திலகூட கலந்துக்க மாட்டேங்கlங்களடா” என்று அய்யாசாமி தாத்தா வேதனையோடு சொல்வது என் படைப்புக்களில் ஆதார சுருதியாக பத்தாண்டுகள்வரை இருந்தது.

மொத் தத்தில், குட் டாம் பட்டியையும் , அ ப்யாசாமி தாத்தாவையும், கிராமிய நடையையும், ஒரளவு அங்கதச் சுவையையும் ஆக்கித்தந்த அந்த சிறுகதை, வாசகர்களுக்கு ஒரு சிறுகதை எனக்கோ பெருங்கதை!

சென்னை வானொலி நிலையம் - 15-1-1983