பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 உயிர்க்கொல்லி விளம்பரங்கள்

தோன்றி வாசித்தார்கள். இந்த வாசிப்பில் நானும் பெருமிதப் பட்டேன். ஆனாலும் இந்தப் பெருமிதம் அதிகநாள் நீடிக்கவில்லை. கிராமங்களில், பெண் வாசிப்பாளர்கள் வாசித்த செய்திகளைவிட, அவர்களது ஆடை அலங்காரங்களைக் கவனிப்பதிலேயே மக்கள் குறிப்பாய் பெண்கள் கண்ணுங் கருத்தாக இருந்தார்கள். இவர்களுக்கு, இந்திய பாகிஸ்தான் பிரச்சி ைன யை விட , நியாய விலை க் க ைடக ளின் அநியாயங்களைவிட, செய்தி வாசிப்பாளர்கள் அணிந்த புடவை டிசைன் மாதிரியும், காதணிகள் மாதிரியும், எப்படி, எங்கே வாங்கலாம் என்பதே பிரச்சினை. இதை நேரடியாகவும், ஒரு சர்வே மூலமும் கண்டுபிடித்தோம். ஏற்கனவே தொலைக்காட்சி சட்டவிதிகளில், நிகழ்ச்சியாளர்கள், நேயர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் ஆடை அலங்காரங்களை கொள்ளலாகாது என்று இருக்கிறது. ஏட்டுச்சுரைக்காயாக இருந்த இந்த விதியை நான் புதுப்பித்து, சுற்றறிக்கையாக விட்டேன். இன்றைய விளம்பரங்களும் இந்த லட்சணத்தில்தான் உள்ளன.

எடுத்துக்காட்டாக, புதுடில்லியில், பல்கலைக்கழக அந்தஸ்தில் உள்ள இந்திய பொதுமக்கள் தொடர்பு நிறுவனத்தில், நான் பயிற்சி பெற சென்றிருந்தேன். (வேண்டாத அலுவலர்களை இப்படி பயிற்சிக்கு அனுப்புவது வழக்கம்) அப்போது விளம்பரத்துறைப் பேராசிரியர், நடந்த நிகழ்ச்சி ஒன்றை எடுத்துரைத்தார். ஒரு சோப்பு வியாபாரி, கிராமம் கிராமமாகச் சென்று, தனது சோப்பின் நியாயமான குணநலன்களை மக்களிடம் எடுத்துரைத்திருக்கிறார். அவருக்கு பேசிப் பேசி வாய் வலித்ததும், எழுதிஎழுதி கைவலித்ததும் தான் மிச்சம். திடீரென்று அவருக்குள் ஒரு அற்புதமான வியாபாரி உயிர்த்தெழுந்தார். மறுநாள் அவர் தயாரித்த சோப்பைப் பயன்படுத்தினால், பாலியல் உறவு பிரமாதமாக இருக்கும் என்று ஒரு பொய்யை அவிழ்த்து விட்டார். அவ்வளவுதான். விற்பனை பிய்த்து வாங்கிவிட்டதாம். இதேபோல், இப்போது வயாகரா மாத்திரைக்கு வந்திருக்கும் பவுசை சொல்ல வேண்டியதில்லை.

உயிரைக் குடிப்பவை

உடைமைகள், ஆடைஅலங்காரங்கள் குறித்த விளம்பரங்கள் பெரும்பாலும் கையைமட்டுமே கடிக்கும். ஆனால் மருந்து - மாத்திரைகள் சம்பந்தப்பட்ட விளம்பரங்கள், உயிரையே குடித்து விடுகின்றன. நமது சித்தவைத்தியர்களும் தங்களது தொழில்