பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 உயிர்க்கொல்லி விளம்பரங்கள்

மூலம் பல மருத்துவர்கள் புறப்பட்டு இருக்கிறார்கள். இவர்களை கத்துக்குட்டிகள் என்றும், வசூல் மன்னர்கள் என்றும் மக்கள் ஒதுக்கிவிடுவார்கள். ஆனால், அரசு மருத்துவ அமைப்புகளே எய்ட்ஸ் நோயாளி ஒரு சிலரை குணப்படுத்தி விட்டதாக பகிரங்கமாக அறிவிக்கின்றன.

என்னால் திட்டவட்டமாக கூறமுடியும். எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடித்த பாடில்லை. நமக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்தும், உடம்புக்குள் உட்புகும் பகையாளிக் கிருமிகளை கொன்று குவித்தும், உடல் நலத்தின் காவல் தெய்வமாக விளங்கும் நமது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், தங்களைப் போல் வேடம் போட்டு உள்ளே நுழையும் எய்ட்ஸ் கிருமிகளிடம் ஏமாந்து, அவற்றை ‘நம்ம ஆளு’ என்று நினைத்து உடம்புக்குள் விட்டு விடுகின்றன. இந்த சகுனிகளான எய்ட்ஸ் கிருமிகள், இறுதியில் வெள்ளை அணுக்களை வஞ்சகமாகக் கொன்று நோய் எதிர்ப்பு சக்தின்ய முற்றிலுமாக'அழித்து. ஒருவர் உடம்பை பல்வேறு நோய்களின் கூடாரமாக மாற்றிவிடுகின்றன. மருத்துவ வரலாற்றிலேயே புதுமையாகவும், எந்த மருந்துப் பகைவனும் இல்லாததுமான இந்த நோயை முறியடிக்கும் மருந்துகளைக் கண்டு பிடிக்க ஆய்வுகள் நடக்கின்றனவே தவிர, ஆன்றபயன் ஏதும் இல்லை. இந்தப் பின்னணியில், தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மருத்துவர்கள், எய்ட்ஸ் நோயாளிகளின் அவஸ்தையைக் குறைத்திருக்கலாம். ஆனால் அந்தநோயை அகற்றியிருக்க முடியாது. அதாவது எய்ட்ஸ் நோயின் அறிகுறிகளோடுதான் இந்த மருத்துவர்கள் போராடுகிறார்களே தவிர, அடிப்படையான நோய்க்கு எதிராக அல்ல. ஒரு நோயைக் குணப்படுத்துவது என்பது வேறு, கட்டுப்படுத்துவது என்பது வேறு.

இப்படிச் சொல்வதால் நான் சித்தமருத்துவத்தையோ அல்லது அலோபதி மருத்துவத்தையோ குறைகூறுவதாகாது. இருதரப்பு மருத்துவத்தின் மீதும் எனக்கு பெருத்த மரியாதை உண்டு. ஆனால் இப்படி மரியாதைக்குறைவான காரியங்களை பொறுப்பானவர்களே செய்யும் போது அதை, நாம் கண்டித்தாகவேண்டும். வலம்புரிஜான் அவர்கள் நடத்திய விழிப்புணர்வு கூட்டத்தில் கேள்விபதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, தகுதிவாய்ந்த ஒரு சித்தமருத்துவ வல்லுநரிடம், இதே கேள்விகளைத்தான் நான் கேட்டேன் அவரும், சித்த மருத்துவத்திலும் இதுவரை எய்ட்ஸ் நோயின் தாக்குதலை குறைக்க முடிகிறதே தவிர, கரைக்க முடியவில்லை என்றார்.