பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 51

தூக்கிப்போடுவதே இப்போதையப் பிரச்சினை. இந்தப் பின்னணியில் சாதிக் கலவரங்கள் தோன்றுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

காரணங்கள்

முதலாவதாக, இப்போது மேலாதிக்கம் செய்யும் சாதியினர் தாங்களும் ஒரு காலத்தில் தலித்துகளைப் போல் அடக்கப்பட்டவர்களே என்பதை மறந்து போனார்கள். குற்றால அருவியில் தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் குளிப்பதற்கு ஒரு காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால்தான் குற்றாலம் சென்ற அண்ணல் காந்தி, இந்த பாவப்பட்ட மக்களுக்கு குளிக்கும் உரிமை கிடைக்கும்வரை தானும் குற்றால அருவியில் குளிக்கப்போவது இல்லை என்று திரும்பிவிட்டார். ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் உயிர்ப்பலி கொடுத்தவர்கள் நாடார்கள். குற்றப் பரம்பரை பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவமானப்படுத்தப் பட்டவர்கள் முக்குலத்தோர். இந்தக் குலத்தின் ஆண்கள் ரேகைச்சட்டம் என்ற சட்டத்தின் பேரில், தினமும் இரவில் அருகே உள்ள காவல் நிலையங்களில் கைரேகை வைத்து விட்டு, அந்த நிலையத்தின் முன்னாலேயே படுக்கவேண்டும். அந்தக் காலத்தில் ‘அருகே” என்பது பத்துபதினைந்து மைல்கள். இந்தக் கொடுரமான ரேகைச்சட்டம் 1939ஆம் ஆண்டு வரை நீடித்தது. ஆக மொத்தத்தில் அடிமைப்பட்ட சாதிகள் அந்த அடிமைத்தளத்தில் இருந்து முற்றிலும் மீளாத தாழ்த்தப்பட்ட சாதியினரை மீட்க வேண்டியது ஒரு தார்மீகக் கடமையாகும். ஆனால் மீட்க வேண்டியவர்களே இந்த மக்களை தங்கள் பங்கிற்கும். இன்னும் தாழ்த்தி வைக்கிறார்கள்.

இர ண் டாவதாக , த லித்து மக்க ளின் எழுச் சி வெளிப்பாடுகளிலும் குற்றங்கள் இல்லையென்றாலும் குறைகள் உள்ளன. முதலாவதாக, நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகுதான், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகமான சலுகைகள் மேன்பட்டு வருவதையும் அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். வேறு விதமாகச் சொல்லப்போனால் அரசையோ, சமூகத்தையோ முற்றிலும் தலித் விரோத நிறுவனங்களாக இவர்கள் நினைக்கலாகாது.

மூன்றாவதாக, தலித் மக்களின் சமூகப் பொருளாதார எழுச்சியை சாதி இந்துக்கள் குறிப்பாக பிற்படுத்தப்ப்ட்ட மக்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். சொந்த சாதியிலேயே எளியவன் ஒருவன் முன்னேறிவிட்டால், அவனை கிண்டலும்