பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 59

ஆண்கவர்ச்சி

பத்திரிகைகளில் வரும் கதைகளில் பெரும்பாலானவை ஆபாசக் களஞ்சியங்கள். ஆபாசம் என்பது அதற்குரிய வார்த்தைகளில் மட்டுமில்லை. அதைவிட ஆபாசமானது, இலைமறைவு காய்மறை வான பாலியல் தூண்டுதல்தான். இதற்கு கதைகளில் பஞ்சமில்லை. இவைபோதாதென்று, சினிமா கிககிகப்புக்கள். எவன் பெண்டாட்டி எவனோடு போனாள் என்பது மாதிரியான சித்தரிப்புக்கள். தமிழகத்தில் பாலியல் கள்ளஉறவு தவிர வேறு எதுவுமே இல்லைஎன்பது மாதிரியான மாய்மால எழுத்துக்கள்-இவைதான் இன்றைய பத்திரிகை அலங்காரங்கள். இப்போதோ திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் ஆண்கவர்ச்சியும் தலைகாட்டுகின்றது. உருண்டு திரண்ட உடம்பை பனியனோடு காட்டும் பழக்கம் இப்போது துவங்கியிருக்கிறது.

செய்யத்தக்கவை

எடுத்துக் கொண்ட விவகாரத் தி ற்கு வருவோம். பெண்கேவலத்தில் ஈடுபடுகிறவர்கள், கைதான பிறகு, மாமூலாய் விடப்பட்டார்களா, அல்லது மாமியார் வீட்டுக்கு அனுப்பப் பட்டார்களா? என்பது நாட்டுக்குத் தெரியவேண்டும். காவல் துறையே இதுகுறித்து அவ்வப்போது அறிக்கை விடவேண்டும். இரண்டாவதாக, பேருந்துகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித் தனி இடஒதுக்கீடு செய்வது இந்தப் பிரச்சனையை கூட்டுமே தவிர குறைக்காது. டில்லி போன்ற பெருநகர்களில் பேருந்து இருக்கைகளில் ஆணும் பெண்ணும் இணையாகவே அமருகிறார்கள். எந்த இளைஞனும் எந்த பெண்ணையும் சீண்டியதில்லை. இதனை அவ்வப் போது டில்லிக்குச் செல்லும் நான் பேருந்துகளில் பயணிக்கும் போதெல்லாம் உன்னிப்பாக பார்த்தது உண்டு. அங்கே பெண் என்பவள் பாலியல் உருவகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மானிடக்கூறு. அவ்வளவுதான். இத்தகைய சமத்துவ இருக்கையை படிப்படியாக இங்கே கொண்டு வந்தால் இந்தப் பிரச்சினை இல்லாது போகலாம். மூன்றாவதாக, இளைஞர்களுக்கு சமூகப் பொறுப்பை ஊட்டவேண்டும். அந்தக்காலத்து மாணவர்களாகிய எங்களுக்கு தேசியம் - திராவிடட் என்பதே பேச்சாகவும், சிந்தனையாகவும் இருந்தது. பெண்களை ஏளனம் செய்வதோ, குடித்துவிட்டு வகுப்புக்குப் போவதோ நாங்கள் கனவில்கூட கண்டறியாதவை.

உடல்தேவை அல்ல

பாலியல் உணர்வு என்பது உடல்தேவையாக இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை. காலில் அடிபட்டால், தொடையில்