பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அரவாணிகள்

பிறப்பதிலும் தாவரங்கள், மிருகங்கள், பறவைகள் போல் வரம்பு கிடையாது. ஆகையால் இயற்கையே, குழந்தை பெற முடியாத அலிகளை உற்பத்தி செய்து, மனிதன் தாழ்த்தும் சமச்சீர் நிலையை ( நராக்குகிறது என்றும் கூறப்படுகிறது.

இவர்களுக்குச் செய்யவேண்டியது

என்றாலும் ஒரு கேள்வி எழுகிறது. மனித சமூகத்தின் ஒட்டுமொத்தமான இயற்கை மீதான பாரா முகத்திற்காக, இந்த அலிகள் ஏன் சிலுவை சுமக்க வேண்டும் என்பதுதான். இவர்களை உற்பத்தி ஆக்குவதில் தந்தைக்கும், மறைமுகமாக சமச்சீர்நிலை தாழ்த்தும் மானுடத்திற்கும் பங்குண்டு. இவர்கள் இப்படி பிறப்பதற்கு இவர்களைப் பிறப்பித்த தந்தையே காரணம். ஆகையால் இவர்களுக்கு படிப்பிலும், வேலையிலும், குடியிருப்பிலும், இடஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும். அன்னை இந்திரா காந்தி இவர்களுக்கு டில்லியில் குடியிருப்பு கட்டிக் கொடுத்தார். இன்றளவும் அவரை இவர்கள் நன்றியோடு நினைவு. கூறுகிறார்கள். அவருக்குப் பிறகு அனாதையாகிப் போனதாய் நினைக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இவர்கள் கேலி க்குரியவர்கள் அல்ல என்று விளக்க வேண்டும். இவர்களை கிண்டல் அடிக்கும் திரைப்படங்களை, நாடகங்களை தடை செய்ய வேண்டும்.

வாடாமல்லியின் தாக்கம்

நமக்கு நாமே என்ற தத்துவத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரவாணிகள் சங்கம் என்ற ஒரு அமைப்பை அண்மையில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். பிற சங்கங்களைப் போல் அல்லாமல் இவர்களின் பிரதிநிதிகளே இவர்களின் தலைவர்கள். இவர்களைப் பற்றி நான் எழுதிய நாவலான “வாடாமல்லிக்கு” வழங்கிய ஆதித்தனார் விருதில் கிடைத்த ஐம்பதாயிரம் ரூபாயில் பத்தாயிரம் ரூபாயை இந்தச் சங்கத்தின் தோற்றத்திற்காகக் கொடுத்தேன். நான் எழுதிய வாடாமல் லி நாவலின் தாக்கத்தால் இப்போதெல்லாம் அரவாணிகள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். பழைய பத்தாம்பசலித் தனமான முறைகேடுகளை விட்டுவிட்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

மத்திய, மாநில அரசுகள் ஊனமுற்றோருக்காக எவ்வளவோ உதவிகள் செய்கின்றன. இந்தப் பாவப்பட்ட அலிமக்களுக்கு இந்த இருவகை அரசுகளும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, வீட்டுமனை, மருத்துவ வசதி போன்றவற்றைச் செய்து